பாடல் 98 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 98 · ஊசற் பருவம்
நன்னிலமகட்கு முகம் அன்ன செந்தாமரைஅலர்ந்த பணையூடு எழுந்தநறிய செஞ்சாலிகள் விளைந்த கதிர் ஊடுமேதித் திரள் நடந்து உழக்கித்துன்னு கதிர் மேய்ந்து கன்னல் படப்பையினில்தொடக்கு வேலியை முறித்துச்சூழல் உட்சென்று கடைவாய் குதட்டியபோது சுடர்முத்து உதிர்ந்து மலியமன்னும் அக்கன்னலை முறித்து அருந்திச்சில வன்மேதிகள் வயற்குள் ஏகிவண்முத்தம் வாயினில் உதிர்த்திடக் கண்டுஇடம் மாறி வரு முத்த(ம்) நோக்கிப்பொன்னுலவு மள்ளர்கள் வியக்கும் வரராசை உமைபொன்னூசல் ஆடி அருளே!பொற்றவர் தரித்தவரோடுற்ற கோமதியம்மைமானியம் பொன்னூசல் ஆடி அருளே!