Kadai 6 · Manimekalai · Seethalai Sathanar

மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை

இளங்கோன் கண்ட இளம் பொன் பூங்கொடிவிளங்கு ஒளி மேனி விண்ணவர் வியப்பபொரு முகப் பளிங்கின் எழினி வீழ்த்துதிருவின் செய்யோள் ஆடிய பாவையின்விரை மலர் ஐங் கணை மீன விலோதனத்துஉருவிலாளனொடு உருவம் பெயர்ப்பஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன்காவி அம் கண்ணி ஆகுதல் தௌிந்துதாழ் ஒளி மண்டபம் தன் கையின் தடைஇச்சூழ்வோன் சுதமதி தன் முகம் நோக்கி'சித்திரக் கைவினை திசைதொறும் செறிந்தன!எத் திறத்தாள் நின் இளங்கொடி? உரை' என'குருகு பெயர்க் குன்றம் கொன்றோன்' அன்ன நின்முருகச் செவ்வி முகந்து தன் கண்ணால்பருகாள் ஆயின் பைந்தொடி நங்கைஊழ் தரு தவத்தள் சாப சரத்திகாமற் கடந்த வாய்மையள்' என்றேதூ மலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப'சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ?நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின்?செவ்வியள் ஆயின் என்? செவ்வியள் ஆக!' எனஅவ்விய நெஞ்சமொடு அகல்வோன் ஆயிடை'அம் செஞ் சாயல்! அராந்தாணத்துள் ஓர்விஞ்சையன் இட்ட விளங்கு இழை என்றேகல்லென் பேர் ஊர்ப் பல்லோர் உரையினைஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய் இழை!ஈங்கு இவள் தன்னோடு எய்தியது உரை' என'வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணிதீ நெறிப் படரா நெஞ்சினை ஆகு மதி!ஈங்கு இவள் தன்னோடு எய்திய காரணம்வீங்குநீர் ஞாலம் ஆள்வோய்! கேட்டருள்!யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன்பார்ப்பன முதுமகன் படிம உண்டியன்மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன்பழ வினைப் பயத்தான் பிழை மணம் எய்தியஎற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின்குரங்கு செய் கடல் குமரி அம் பெருந் துறைப்பரந்து செல் மாக்களொடு தேடினன் பெயர்வோன்கடல் மண்டு பெருந் துறைக் காவிரி ஆடியவட மொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு"யாங்கனம் வந்தனை என் மகள்?" என்றேதாங்காக் கண்ணீர் என் தலை உதிர்த்து ஆங்குஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்காதலன் ஆதலின் கைவிடலீயான்இரந்து ஊண் தலைக்கொண்டு இந் நகர் மருங்கில்பரந்து படு மனைதொறும் திரிவோன் ஒரு நாள்புனிற்று ஆப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன்கணவிர மாலை கைக்கொண்டென்னநிணம் நீடு பெருங் குடர் கை அகத்து ஏந்தி"என் மகள் இருந்த இடம்" என்று எண்ணிதன் உறு துன்பம் தாங்காது புகுந்து"சமணீர்காள்! நும் சரண்" என்றோனை"இவன் நீர் அல்ல" என்று என்னொடும் வெகுண்டுமை அறு படிவத்து மாதவர் புறத்து எமைக்கையுதிர்க்கோடலின் கண் நிறை நீரேம்"அறவோர் உளீரோ? ஆரும் இலோம்!" எனப்புறவோர் வீதியில் புலம்பொடு சாற்றமங்குல் தோய் மாட மனைதொறும் புகூஉம்அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன்கதிர் சுடும் அமயத்துப் பனி மதி முகத்தோன்பொன்னின் திகழும் பொலம் பூ ஆடையன்"என் உற்றனிரோ?" என்று எமை நோக்கிஅன்புடன் அளைஇய அருள்மொழி அதனால்அஞ்செவி நிறைந்து நெஞ்சகம் குளிர்ப்பித்துதன் கைப் பாத்திரம் என் கைத் தந்து ஆங்குஎந்தைக்கு உற்ற இடும்பை நீங்கஎடுத்தனன் தழீஇ கடுப்பத் தலை ஏற்றிமாதவர் உறைவிடம் காட்டிய மறையோன்சா துயர் நீங்கிய தலைவன் தவ முனிசங்கதருமன் தான் எமக்கு அருளியஎம் கோன் இயல் குணன் ஏதம் இல் குணப் பொருள்உலக நோன்பின் பல கதி உணர்ந்துதனக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளன்இன்பச் செவ்வி மன்பதை எய்தஅருளறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின்அறக் கதிர் ஆழி திறப்பட உருட்டிகாமற் கடந்த வாமன் பாதம்தகைபாராட்டுதல் அல்லது யாவதும்மிகை நா இல்லேன் வேந்தே வாழ்க!' என'அம் சொல் ஆய் இழை! இன் திறம் அறிந்தேன்வஞ்சி நுண் இடை மணிமேகலை தனைச்சித்திராபதியால் சேர்தலும் உண்டு' என்றுஅப் பொழில் ஆங்கு அவன் அயர்ந்து போய பின்பளிக்கறை திறந்து பனி மதி முகத்துக்களிக் கயல் பிறழாக் காட்சியள் ஆகி"கற்புத் தான் இலள் நல் தவ உணர்வு இலள்வருணக் காப்பு இலள் பொருள் விலையாட்டி" என்றுஇகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாதுபுதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை?'இதுவே ஆயின் கெடுக தன் திறம்!' எனமது மலர்க் குழலாள் மணிமேகலை தான்சுதமதி தன்னொடும் நின்ற எல்லையுள்இந்திர கோடணை விழா அணி விரும்பிவந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம்பதிஅகத்து உறையும் ஓர் பைந்தொடி ஆகிமணி அறைப் பீடிகை வலம் கொண்டு ஓங்கி'புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ!குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய்முற்ற உணர்ந்த முதல்வா என்கோ!காமற் கடந்தோய் ஏமம் ஆயோய்தீ நெறிக் கடும் பகை கடிந்தோய் என்கோ!ஆயிர ஆரத்து ஆழி அம் திருந்து அடிநா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன்?' என்றுஎரி மணிப் பூங் கொடி இரு நில மருங்கு வந்துஒரு தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கிநில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும்புல வரை இறந்த புகார் எனும் பூங்கொடிபல் மலர் சிறந்த நல் நீர் அகழிப்புள் ஒலி சிறந்த தெள் அரிச் சிலம்பு அடிஞாயில் இஞ்சி நகை மணி மேகலைவாயில் மருங்கு இயன்ற வான் பணைத் தோளிதருநிலை வச்சிரம் என இரு கோட்டம்எதிர் எதிர் ஓங்கிய கதிர் இள வன முலைஆர் புனை வேந்தற்குப் பேர் அளவு இயற்றிஊழி எண்ணி நீடு நின்று ஓங்கியஒரு பெருங் கோயில் திருமுகவாட்டிகுண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும்குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும்வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடு ஆகஎள் அறு திருமுகம் பொலியப் பெய்தலும்அன்னச் சேவல் அயர்ந்து விளையாடியதன்னுறு பெடையைத் தாமரை அடக்கபூம் பொதி சிதையக் கிழித்துப் பெடை கொண்டுஓங்கு இருந் தெங்கின் உயர் மடல் ஏறஅன்றில் பேடை அரிக் குரல் அழைஇசென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்பபவளச் செங் கால் பறவைக் கானத்துகுவளை மேய்ந்த குடக் கண் சேதாமுலை பொழி தீம் பால் எழு துகள் அவிப்பகன்று நினை குரல மன்று வழிப் படரஅந்தி அந்தணர் செந் தீப் பேணபைந் தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்பயாழோர் மருதத்து இன் நரம்பு உளரக்கோவலர் முல்லைக் குழல் மேற்கொள்ளஅமரக மருங்கில் கணவனை இழந்துதமர் அகம் புகூஉம் ஒரு மகள் போலகதிர் ஆற்றுப்படுத்த முதிராத் துன்பமோடுஅந்தி என்னும் பசலை மெய்யாட்டிவந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என்
Share

விளக்கம்

இந்தக் காதையில் மணிமேகலை காமத்தை மறுக்கிறாள்: 'இதுவோ காமத்து இயற்கை? இதுவே ஆயின் கெடுக தன் திறம்' என்று சொல்கிறாள். அதன் பிறகு மணிமேகலா தெய்வம் இந்திர விழாவின் அழகைக் காண விரும்பி நகரப் பெண் வடிவில் வந்து, பீடிகையை வலம் வந்து புத்தனை ஏத்துகிறாள்.

காதை முழுவதும் அந்தி நேரத்து நகரம்: கோயில் திருமுகம், மயில், யாழ், விளக்கு. இறுதியில் 'கணவனை இழந்து தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல' அந்தி நகரை அடைகிறது — துறவின் தொடக்கத்தில் ஒரு மாலைக் காட்சி.