verse 14 · Muthukumaraswami Pillaitamil · Kumaraguruparar
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 14 · செங்கீரைப் பருவம்
மைவிழி செங்கமல வல்லிக்கு நேமியான் மணிமார்பு வாணிக்குநான்மறைமுதலி செந்நாத் தடந்தைய லாளொடும் வயித்தியக் கடவுளார்க்குமெய்விரிக் குந்தொண்ட ருள்ளத் தடத்தினொடு வேதச் சிரங்கடுப்பவேதபுரி கந்தபுரி புள்ளு ரெனப்பொலியும் வேளூர திசைதிசைதொறும்கைவகுத் தரமகளிர் குரவையாட் டயர்பெருங் கயிலைத் தடஞ்சாரலும்கனகாச லத்தும்வள ரிமயா சலத்துமுயர் கந்தமா தனவெற்பெனத்தெய்வதப் பிடியொடும் விளையாடு மழகளிறு செங்கீரை யாடியருளேசெத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணாவாள செங்கீரை யாடியருளே.