verse 18 · Muthukumaraswami Pillaitamil · Kumaraguruparar
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 18 · செங்கீரைப் பருவம்
விரல்சுவை யுண்டு கனிந்தமு தூறிய மெல்லிதழ் புலராமேவிம்மிப் பொருமி விழுந்தழு தலறியுன் மென்குரல் கம்மாமேகரைவுறு மஞ்சன நுண்டுளி சிந்திக் கண்மலர் சிவவாமேகலுழ்கலு ழிப்புன லருவி படிந்துடல் கருவடி வுண்ணாமேஉருவ மணிச்சிறு தொட்டி லுதைந்துநி னொண்பத நோவாமேஒருதா ளுந்தி யெழுந்திரு கையும் ஒருங்கு பதித்துநிமிர்ந்தருள்பொழி திருமுக மசைய வசைந்தினி தாடுக செங்கீரைஆதி வயித்திய நாத புரிக்குகன் ஆடுக செங்கீரை.