verse 21 · Muthukumaraswami Pillaitamil · Kumaraguruparar

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 21 · தாலப் பருவம்

பில்கும் பசுந்தே னசும்பிருந்த பின்றா ழளகத் தரமகளிர்பேதைக் குறும்பு விளையாடும் பேரா யத்துச் சிறுமருங்குற்கொல்குங் கொடிபோய் நுடங்கியிட ஓங்கும் பளிக்கு நிலாமுற்றத்துயர்சூ ளிகையின் மரகதத்தின் ஒளிகால் வீசத் தௌிவிசும்பிற்பல்குஞ் சுரபி தரங்கநெடும் பாகீ ரதியின் கரைக்கிளைத்தபசும்புல் லெனச்செந் நாவளைக்கும் பைம்பொற் றலங்கள் பலகோடிமல்குஞ் செல்வக் கந்தபுரி வாழ்வே தாலோ தாலேலோமலையாள் வயிறு வாய்த்தமுழு மணியே தாலோ தாலேலோ.
Share