verse 9 · Muthukumaraswami Pillaitamil · Kumaraguruparar

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 9 · காப்புப் பருவம்

பயிறரு முதுமறை நூலைத் தெரித்தவள் பகைதொகு புரமெரி மூளச் சிரித்தவள்பனிவரை பகநெடு வேலைப் பணித்தவள் படுகடல் புகையெழ வார்விற் குனித்தவள்எயிறுகொ டுழுதெழு பாரைப் பெயர்த்தவள் எறிதரு குலிசம்வி டாமற் றரித்தவள்இடுபலி கொளுமொர்க பாலக் கரத்தினள் எனுமிவ ரெழுவர்க டாளைப் பழிச்சுதும்கயறிரி சரவண வாவிக் கரைக்குரை கழலொடு பரிபுர மோலிட் டிடக்கடகளிறொடு களிறெதிர் மோதத் திசைத்திசை கடுநடை யுளதக ரேறச் சமர்த்தனைமுயறரு கறையொடு தேய்வுற் றிளைத்தொரு முழுமதி குறைமதி யாகத் துகிற்கொடிமுகிறொடு தடமதில் வேதப் பதித்தனி முதல்வனை யறுமுக வேளைப் புரக்கவே.
Share