verse 8 · Muthukumaraswami Pillaitamil · Kumaraguruparar
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 8 · காப்புப் பருவம்
துறைபட்ட மறையவன் செந்நாப் படிந்துதன் சுதைநிறஞ் சிதைவுறாமேதொன்றுமறை கனிந்தூறு மண்பனீ ரூறலிற் றூத்துகி னனைப்புறாமேநறைபட்ட வெண்டோட்டு நளினப் பொகுட்டெமது நன்னெஞ் செனக்குடிபுகும்ஞானப் பிராட்டியைச் சொற்கடற் றெள்ளமுதை நாத்தழும் பத்துதிப்பாம்சிறைபட்ட தண்டுறைச் சித்தாமிர் தப்பெருந் தீர்த்தந் திளைத்தாடியசெஞ்சுடர்க் கடவுளும் வெண்சுடர்க் கடவுளிற் றெள்ளமுத மயமாகலான்உறைபட்ட சுதைநிலவொ டிளவெயிலு மளவளாய் உண்ணச் சகோரம்வெஃகும்ஓங்கெயிற் பருதிபுரி முருகனைச் சண்முகத் தொருவனைக் காக்கவென்றே.