verse 3 · Muthukumaraswami Pillaitamil · Kumaraguruparar
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 3 · காப்புப் பருவம்
குழைய டர்ந்துவடி கணைது ரந்துசெறிகுமிழ்ம றிந்தவிழி நவ்வியைக் கோட்டொடுகுவடெ றிந்தமுத கலசம் வென்றதடமுலைசு மந்தமலை வல்லியைச் சேற்றொளிர்குமுதம் விண்டசுவை யமுத முண்டினியகொழுநர் கொஞ்சுசிறு கிள்ளையைத் தாட்டுணைகுறுகு தொண்டர்பிழை யறம றந்துபிறர்குணமி கழ்ந்ததக வில்லியைச் சேட்செலும்எழுபெ ரும்புவன முழுதொ ருங்குதவும்இறைவி யென்றுமறை கையெடுத் தார்க்கவும்இடைநு டங்குமட நடையி ளங்குமரிஎனவி ருந்தகன கள்வியைப் பூத்தவென்இதய புண்டரிக மலரி லெந்தையொடும்இனித மர்ந்தவொரு செல்வியைப் பாற்றொகும்இருவர் கண்கள்கது வரிய செஞ்சுடரின்இடம ருங்குடைய தையலைப் போற்றுதும்முழுது ணர்ந்துமுணர் வரிய தொன்றையொருமொழியின் விண்டசிறு பிள்ளையைச் சூர்ப்பெயர்முதுப ழம்பகையை யறவெ றிந்தவுணர்முதற டிந்ததனி வில்லியைப் பாட்டளிமுரல விண்டதரு நிழறொ ழும்புகுடிபுகவ ழங்குகொடை வள்ளலைப் போற்றடிமுடியு மின்றிவெறு வௌிக டந்துமறைமுடிவி னின்றுநிறை செல்வனைக் காத்தொறும்மழலை வண்டுதட மலர்கு டைந்துபுதுமதுவ ருந்திநறு மல்லிகைச் சேக்கையின்வடிப சுந்தமிழி னிசைப யின்றபெடையொடுது யின்றினிய செவ்வழிப் பாட்டினைவருவி பஞ்சிபயி றரும தங்கர்தெருமரமு ரன்றுநெடு வைகறைப் போய்ச்செழுமலரி லஞ்சிதொறு முலவு கந்தபுரிமருவு கந்தனையெ மையனைக் காக்கவே.