verse 37 · Muthukumaraswami Pillaitamil · Kumaraguruparar
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 37 · சப்பாணிப் பருவம்
சமரிற் பட்டவர் வெட்டிய பூதத் தலைவர்க ணிற்பமுதற்றாமரை நாயகன் வயிறு கிழித்துத் தந்தொழி றலைநின்றாங்கமரிற் குரிய மடக்கொடி யாரை அலைத்தனர் பற்றியெயிற்றவுண ரெனத்தமை யுணரார் கணவர்கள் ஆர்ப்பில் வெடித்தபெருங்கமரிற் குருதி பிலத்தை நிரப்பிடு களமெதிர் கண்டினியக்காரவு ணக்கடல் சூரொடு மாளக் கடிதிற் றடிதியடற்குமரக் கடவு ளெனப்பணி வேலவ கொட்டுக சப்பாணிகொழிதமிழ் வேத புரிக்கும ரேசன் கொட்டுக சப்பாணி.