verse 41 · Muthukumaraswami Pillaitamil · Kumaraguruparar

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 41 · முத்தப் பருவம்

குருகு நாறு செந்தளிர்க்கைக் கொடிநுண் ணுசுப்பிற் கோட்டிமயக்குலப்பூங் கொம்பு நறவூழ்த்த கொழுந்தா மரையோ டவிழ்ந்ததுழாய்ச்சருகு நாறு முடைத்தலையின் தாம நாறு திரடிண்டோட்டாதையாருங் கண்டுகண்டு தடங்கண் களிப்பக் குரவுவிரிந்தருகு நாறு திருமேனி அந்தீங் குதலை மழலைகனிந்தமுத மூறு பசுந்தேறல் அசும்பு நாறத் தெய்வமணமுருகு நாறுஞ் செங்கனிவாய் முத்தந் தருக முத்தமேமும்மைத் தமிழ்தேர் கந்தபுரி முருகா முத்தந் தருகவே.
Share