verse 59 · Muthukumaraswami Pillaitamil · Kumaraguruparar

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 59 · வருகைப் பருவம்

உலகு குளிர வெமது மதியி லொழுகு மமுத கிரணமேஉருகு மடிய ரிதய நெகிழ வுணர்வி லெழுந லுதயமேகலையு நிறையு மறிவு முதிர முதிரு மதுர நறவமேகழுவு துகளர் முழுக நெடிய கருணை பெருகு சலதியேஅலகில் புவன முடியும் வௌியி லளியு மொளியி னிலயமேஅறிவு ளறிவை யறியு மவரு மறிய வரிய பிரமமேமலையின் மகள்கண் மணியை யனைய மதலை வருக வருகவேவளமை தழுவு பருதி புரியின் மருவு குமரன் வருகவே.
Share