verse 63 · Muthukumaraswami Pillaitamil · Kumaraguruparar
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 63 · அம்புலிப் பருவம்
கங்கைமுடி யடிகட்கொர் கண்ணா யிருத்தியக் கண்ணினுண் மணியிவன்காண்கலைகள்சில நிறைதிபின் குறைதியிவ னென்றுமொண் கலைமுழுது நிறையநின்றான்எங்குமிர வோனெனத் திரிதியிவ னடியவர் எவர்க்குமிர வினையொழித்தான்இருநிலத் தங்குரிக் கும்பயிர் வளர்த்தியிவன் எவ்வுயிரும் வாழச்செய்தான்பொங்கமுத மமுதா சனர்க்குதவி னாயிவன் புத்திமுத் தியுமளித்தான்புவனம் படைத்தவிவ னின்னின்மிக் கானெனப் புகல்வதோர் பொருளன்றுகாண்அங்கண்மறை யோலிட் டரற்றநின் றவனுடன் அம்புலீ யாடவாவேஅழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் அம்புலீ யாடவாவே.