verse 64 · Muthukumaraswami Pillaitamil · Kumaraguruparar
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 64 · அம்புலிப் பருவம்
பாயிருட் போதத் திருட்டன்றி யகவிருட் படலங் கிழிப்பதுணராய்பனிவிசும் பிற்பொலிவ தொன்றலாற் புவனப் பரப்பெலாம் பொலிவதோராய்சேயிதழ்க் குமுதந் திறப்பதல் லாதுளத் திருமலர் திறக்கவறியாய்சிறைவிரி சகோரப்பு ளன்றியெவ் வுயிரும் திளைத்தின்ப மாரச்செயாய்நீயிவற் கொப்பன்மை செப்புவதெ னிப்பரிசில் நின்பெருந் தவமென்சொல்கேன்நெடியவன் முதற்றேவர் குறுகிநிற் பவுமுனை நினைத்தழைத் தருளினன்காண்ஆயிர மறைக்குமொரு பொருளா யிருப்பவனோ டம்புலீ யாடவாவேஅழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் அம்புலீ யாடவாவே.