காதை 13 · சிலப்பதிகாரம் · இளங்கோ அடிகள்

வேட்டுவ வரி

கடுங்கதிர் திருகலின் நடுங்கஞர் எய்திஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்பநறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த் தாங்குஐயை கோட்டத் தெய்யா வொருசிறைவருந்துநோய் தணிய இருந்தனர் உப்பால்வழங்குவில் தடக்கை மறக்குடித் தாயத்துப்பழங்கட னுற்ற முழங்குவாய்ச் சாலினிதெய்வ முற்று மெய்ம்மயிர் நிறுத்துக்கையெடுத் தோச்சிக் கானவர் வியப்பஇடுமுள் வேலி எயினர்கூட் டுண்ணும்நடுவூர் மன்றத் தடிபெயர்த் தாடிக்கல்லென் பேரூர்க் கணநிரை சிறந்தனவல்வில் எயினர் மன்றுபாழ் பட்டனமறக்குடித் தாயத்து வழிவளஞ் சுரவாதுஅறக்குடி போலவிந் தடங்கினர் எயினரும்கலையமர் செல்வி கடனுணின் அல்லதுசிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்மட்டுண் வாழ்க்கை வேண்டுதி ராயின்கட்டுண் மாக்கள் கடந்தரும் எனவாங்குஇட்டுத் தலையெண்ணும் எயின ரல்லதுசுட்டுத் தலைபோகாத் தொல்குடிக் குமரியைச்சிறுவெள் ளரவின் குருளைநாண் சுற்றிக்குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டிஇளைசூழ் படப்பை இழுக்கிய வேனத்துவளைவெண் கோடு பறித்து மற்றதுமுளைவெண் திங்க ளென்னச் சாத்திமறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்றமாலை வெண்பல் தாலிநிரை பூட்டிவரியும் புள்ளியு மயங்கு வான்புறத்துஉரிவை மேகலை உடீஇப் பரிவொடுகருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்திரிதரு கோட்டுக் கலைமே லேற்றிப்பாவையுங் கிளியுந் தூவி அஞ்சிறைக்கானக் கோழியும் நீனிற மஞ்ஞையும்பந்துங் கழங்குந் தந்தனர் பரசிவண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும்புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்பூவும் புகையும் மேவிய விரையும்ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வரஆறெறி பறையுஞ் சூறைச் சின்னமும்கோடும் குழலும் பீடுகெழு மணியும்கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் னிறீஇவிலைப்பலி உண்ணும் மலர்பலி பீடிகைக்கலைப்பரி ஊர்தியைக் கைதொழு தேத்திஇணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக்கணவனோ டிருந்த மணமலி கூந்தலைஇவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டிதென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்துஒருமா மணியாய் உலகிற் கோங்கியதிருமா மணியெனத் தெய்வமுற் றுரைப்பப்பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டியென்றுஅரும்பெறற் கணவன் பெரும்புறத் தொடுங்கிவிருந்தின் மூரல் அரும்பினள் நிற்பமதியின் வெண்தோடு சூடுஞ் சென்னிநுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சிநஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்துஅரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சிவளையுடைக் கையிற் சூல மேந்திகரியின் உரிவை போர்த் தணங் காகியஅரியின் உரிவை மேகலை யாட்டிசிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடிவலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவைஇரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்தலைமிசை நின்ற தையல் பலர்தொழும்அமரி குமரி கவுரி சமரிசூலி நீலி மாலவற் கிளங்கிளைஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப்பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவைஆய்கலைப் பாவை அருங்கலப் பாவைதமர்தொழ வந்த குமரிக் கோலத்துஅமரிளங் குமரியும் அருளினள்வரியுறு செய்கை வாய்ந்ததா லெனவே;உரைப்பாட்டுமடை.வேறுநாகம் நாறு நரந்தம் நிரந்தனஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும்சேவும் மாவும் செறிந்தன கண்ணுதல்பாகம் ஆளுடை யாள்பலி முன்றிலே;செம்பொன் வேங்கை சொரிந்தன சேயிதழ்கொம்பர் நல்லில வங்கள் குவிந்தனபொங்கர் வெண்பொரி சிந்தின புன்கிளந்திங்கள் வாழ்சடை யாள்திரு முன்றிலே;மரவம் பாதிரி புன்னை மணங்கமழ்குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர்மேல்அரவ வண்டினம் ஆர்த்துடன் யாழ்செய்யும்திருவ மாற்கிளை யாள்திரு முன்றிலே;வேறுகொற்றவை கொண்ட அணிகொண்டு நின்றவிப்பொற்றொடி மாதர் தவமென்னை கொல்லோபொற்றொடி மாதர் பிறந்த குடிப்பிறந்தவிற்றொழில் வேடர் குலனே குலனும்;ஐயை திருவின் அணிகொண்டு நின்றவிப்பையர வல்குல் தவமென்னை கொல்லோபையர வல்குல் பிறந்த குடிப்பிறந்தஎய்வில் எயினர் குலனே குலனும்;பாய்கலைப் பாவை அணிகொண்டு நின்றவிவ்ஆய்தொடி நல்லாள் தவமென்னை கொல்லோஆய்தொடி நல்லாள் பிறந்த குடிப்பிறந்தவேய்வில் எயினர் குலனே குலனும்;வேறுஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக்கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால்வானோர் வணங்க மறைமேல் மறையாகிஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்;வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக்கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்அரியரன்பூ மேலோன் அகமலர்மேல் மன்னும்விரிகதிரஞ் சோதி விளக்காகி யேநிற்பாய்;சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச்செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால்கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்துமங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய்;வேறுஆங்குக்,கொன்றையுந் துளவமும் குழுமத் தொடுத்ததுன்று மலர்ப்பிணையல் தோள்மே லிட்டாங்குஅசுரர் வாட அமரர்க் காடியகுமரிக் கோலத்துக் கூத்துள் படுமே;வேறுஆய்பொன் னரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப வார்ப்பமாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடும் போலும்மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடுமாயின்காயாமலர்மேனி யேத்திவானோர் கைபெய் மலர்மாரி காட்டும் போலும்;உட்குடைச் சீறூ ரொருமகன்ஆ னிரைகொள்ள உற்ற காலைவெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டும் போலும்வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டின் வேற்றூர்க்கட்சியுட் காரி கடிய குரலிசைத்துக் காட்டும் போலும்;கள்விலை யாட்டி மறுப்பப் பொறாமறவன் கைவில் ஏந்திப்புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகும் போலும்புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப் போகுங் காலைக்கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும் கொடுமரமுன் செல்லும் போலும்வேறுஇளமா எயிற்றி இவைகாண் நின் னையர்தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள்கொல்லன் துடியன் கொளைபுணர் சீர்வல்லநல்லியாழ்ப் பாணர்தம் முன்றில் நிறைந்தன;முருந்தேர் இளநகை காணாய்நின் னையர்கரந்தை யலறக் கவர்ந்த இனநிரைகள்கள்விலை யாட்டிநல் வேய்தெரி கானவன்புள்வாய்ப்புச் சொன்னகணி முன்றில் நிறைந்தன;கயமல ருண்கண்ணாய் காணாய்நின் னையர்அயலூர் அலற எறிந்தநல் ஆனிரைகள்நயனில் மொழியின் நரைமுது தாடிஎயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன;துறைப்பாட்டுமடை.வேறுசுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்இடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம்அடல்வலி எயினர்நின் அடிதொடு கடனிதுமிடறுகு குருதிகொள் விறல்தரு விலையே;அணிமுடி அமரர்தம் அரசொடு பணிதருமணியுரு வினைநின மலரடி தொழுதேம்கணநிறை பெறுவிறல் எயினிடு கடனிதுநிணனுகு குருதிகொள் நிகரடு விலையே;துடியொடு சிறுபறை வயிரொடு துவைசெயவெடிபட வருபவர் எயினர்கள் அரையிருள்அடுபுலி யனையவர் குமரிநின் அடிதொடுபடுகடன் இதுவுகு பலிமுக மடையே;வேறுவம்பலர் பல்கி வழியும் வளம்படஅம்புடை வல்வில் எயின்கடன் உண்குவாய்சங்கரி அந்தரி நீலி சடாமுடிச்செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்;துண்ணென் துடியொடு துஞ்சூர் எறிதருகண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய்விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும்உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்;பொருள்கொண்டு புண்செயி னல்லதை யார்க்கும்அருளில் எயினர் இடுகடன் உண்குவாய்மருதின் நடந்துநின் மாமன்செய் வஞ்சஉருளுஞ் சகடம் உதைத்தருள் செய்குவாய்;வேறுமறைமுது முதல்வன் பின்னர் மேயபொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறர்நாட்டுக்கட்சியும் கரந்தையும் பாழ்படவெட்சி சூடுக விறல்வெய் யோனே.
பகிர்

விளக்கம்

வேட்டுவர் பாடும் பாட்டு இது — காட்டு வாழ்வின் தாளம். பெருங்காப்பியத்துக்குள் நாட்டுப்புறப் பாடல் முழு அத்தியாயமாக நுழைவது சிலம்பின் தனிச்சிறப்பு.

வேட்டையின் வேகமும் காட்சியின் அழகும் ஒரே பாட்டில் வருகின்றன. கதை இங்கே நகர்வதில்லை; ஆனால் காட்டின் உலகம், அதன் மனிதர், அதன் மொழி — எல்லாம் கதைக்குள் நிலைபெறுகின்றன.