காதை 9 · சிலப்பதிகாரம் · இளங்கோ அடிகள்
வேனில் காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டுமாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும்அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்மன்னன் மாரன் மகிழ்துணை ஆகியஇன்இள வேனில் வந்தனன் இவண்எனவளம்கெழு பொதியில் மாமுனி பயந்தஇளங்கால் துதன் இசைத்தனன் ஆதலின்மகர வெல்கொடி மைந்தன் சேனைபுகர்அறு கோலம் கொள்ளும்என் பதுபோல்கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும்படையுள் படுவோன் பணிமொழி கூற,மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டினுள்கோவலன் ஊடக் கூடாது ஏகியமாமலர் நெடுங்கண் மாதவி விரும்பிவான்உற நிவந்த மேல்நிலை மருங்கின்வேனில் பள்ளி ஏறி மாண்இழைதென்கடல் முத்தும் தென்மலைச் சாந்தும்தன்கடன் இறுக்கும் தன்மைய ஆதலின்கொங்கை முன்றில் குங்கும வளாகத்துமைஅறு சிறப்பின் கையுறை ஏந்திஅதிரா மரபின் யாழ்கை வாங்கிமதுர கீதம் பாடினள் மயங்கி,ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்திநன்பால் அமைந்த இருக்கையள் ஆகி,வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்திஇடக்கை நால்விரல் மாடகம் தழீஇச்செம்பகை ஆர்ப்பே கூடம் அதிர்வேவெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து,பிழையா மரபின் ஈர்ஏழ் கோவையைஉழைமுதல் கைக்கிளை இறுவாய் கட்டி,இணைகிளை பகைநட்பு என்றுஇந் நான்கின்இசைபுணர் குறிநிலை எய்த நோக்கிக்குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் அன்றியும்வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்உழைமுதல் ஆகவும் உழைஈறு ஆகவும்குரல்முதல் ஆகவும் குரல்ஈறு ஆகவும்அகநிலை மருதமும் புறநிலை மருதமும்அருகியல் மருதமும் பெருகியல் மருதமும்நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி,மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பித்திறத்து வழிப்படூஉம் தெள்ளிசைக் கரணத்துப்புறத்துஒரு பாணியில் பூங்கொடி மயங்கி,சண்பகம் மாதவி தமாலம் கருமுகைவெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்தஅம்செங் கழுநீர் ஆய்இதழ்க் கத்திகைஎதிர்ப்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்தமுதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டுவிரைமலர் வாளியின் வியன்நிலம் ஆண்டஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின்ஒருமுகம் அன்றி உலகுதொழுது இறைஞ்சும்திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி,அலத்தகக் கொழுஞ்சேறு அளைஇ அயலதுபித்திகைக் கொழுமுகை ஆணி கைக்கொண்டு,மன்உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும்இன்இள வேனில் இளவர சாளன்அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றியதிங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்புணர்ந்த மாக்கள் பொழுதுஇடைப் படுப்பினும்தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும்நறும்பூ வாளியின் நல்உயிர் கோடல்இறும்பூது அன்றுஅஃது அறிந்தீ மின்எனஎண்எண் கலையும் இசைந்துஉடன் போகபண்ணும் திறனும் புறங்கூறு நாவின்தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்துவிளையா மழலையின் விரித்துஉரை எழுதி,பசந்த மேனியள் படர்உறு மாலையின்வசந்த மாலையை வருகெனக் கூஉய்த்தூமலர் மாலையின் துணிபொருள் எல்லாம்கோவலற்கு அளித்துக் கொணர்க ஈங்குஎனமாலை வாங்கிய வேல்அரி நெடுங்கண்கூல மறுகிற் கோவலற்கு அளிப்ப,திலகமும் அளகமும் சிறுகருஞ் சிலையும்குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்டமாதர் வாள்முகத்து மதைஇய நோக்கமொடுகாதலின் தோன்றிய கண்கூடு வரியும்,புயல்சுமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக்கயல்உலாய்த் திரிதரும் காமர் செவ்வியின்பாகுபொதி பவளம் திறந்துநிலா உதவியநாகுஇள முத்தின் நகைநிலம் காட்டிவருகென வந்து போகெனப் போகியகருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும்,அந்தி மாலை வந்ததற்கு இரங்கிச்சிந்தை நோய் கூரும்என் சிறுமை நோக்கிக்கிளிபுரை கிளவியும் மடஅன நடையும்களிமயில் சாயலும் கரந்தனள் ஆகிச்செருவேல் நெடுங்கண் சிலதியர் கோலத்துஒருதனி வந்த உள்வரி ஆடலும்,சிலம்புவாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும்கலம்பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடுதிறத்துவேறு ஆயஎன் சிறுமை நோக்கியும்புறத்துநின்று ஆடிய புன்புற வரியும்,கோதையும் குழலும் தாதுசேர் அளகமும்ஒருகாழ் முத்தமும் திருமுலைத் தடமும்மின்இடை வருத்த நன்னுதல் தோன்றிச்சிறுகுறுந் தொழிலியர் மறுமொழி உய்ப்பப்புணர்ச்சிஉட் பொதிந்த கலாம்தரு கிளவியின்இருபுற மொழிப்பொருள் கேட்டனள் ஆகித்தளர்ந்த சாயல் தகைமென் கூந்தல்கிளர்ந்துவேறு ஆகிய கிளர்வரிக் கோலமும்,பிரிந்துஉறை காலத்துப் பரிந்தனள் ஆகிஎன்உறு கிளைகட்குத் தன்உறு துயரம்தேர்ந்துதேர்ந்து உரைத்த தேர்ச்சிவரி அன்றியும்,வண்டுஅலர் கோதை மாலையுள் மயங்கிக்கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும்,அடுத்துஅடுத்து அவர்முன் மயங்கிய மயக்கமும்எடுத்துஅவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும்,ஆடல் மகளே ஆதலின் ஆயிழை.பாடுபெற் றனஅப் பைந்தொடி தனக்குஎன,அணித்தோட்டுத் திருமுகத்து ஆயிழை எழுதிய,மணித்தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு இரங்கிவாடிய உள்ளத்து வசந்த மாலைதோடுஅலர் கோதைக்குத் துனைந்துசென்று உரைப்பமாலை வாரார் ஆயினும் மாண்இழை.காலைகாண் குவம்எனக் கையறு நெஞ்சமொடுபூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்மாமலர் நெடுங்கண் மாதவி தான்என்.(வெண்பா)செந்தா மரைவிரியத் தேமாங் கொழுந்துஒழுகமைந்தார் அசோகம் மடல்அவிழக் - கொந்தார்இளவேனில் வந்ததால் என்ஆம்கொல் இன்றுவளவேல்நற் கண்ணி மனம்.ஊடினீர் எல்லாம் உருஇலான் தன்ஆணைகூடுமின் என்று குயில்சாற்ற - நீடியவேனற்பா ணிக்கலந்தாள் மென்பூந் திருமுகத்தைக்கானற்பா ணிக்குஅலந்தாய் காண்.
விளக்கம்
வேனில் பருவம் வந்ததை நான்கு நகரங்களின் பெயரோடு தொடங்குகிறது காதை — மதுரை, உறந்தை, வஞ்சி, புகார். பருவம் மாறும்போது மனமும் மாறுகிறது; கோவலன் ஊடல் கொண்டு மாதவியை விட்டு விலகுகிறான்.
பிறகு வசந்த மாலையின் தூதும், ஓலையும், அதற்கு வந்த மறுப்பும், மாதவியின் காத்திருப்பும் வருகின்றன. காதை முழுவதும் பாடல்களால் நெய்யப்பட்ட ஒரு ஊடல்; இறுதி வெண்பா 'கானற்பாணிக்கு அலந்தாய் காண்' என்று மணல் திட்டில் பாடும் பாணனை நோக்கி முடிகிறது.