காதை 4 · சிலப்பதிகாரம் · இளங்கோ அடிகள்

அரங்கேற்று காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)தெய்வ மால்வரைத் திருமுனி அருளஎய்திய சாபத்து இந்திர சிறுவனொடுதலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கியமலைப்புஅருஞ் சிறப்பின் வானவர் மகளிர்சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்தியபிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தைதாதுஅவிழ் புரிகுழல் மாதவி தன்னைஆடலும் பாடலும் அழகும் என்றுஇக்கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல்ஏழாண்டு இயற்றிஓர் ஈராறு ஆண்டில்சூழ்கடல் மன்னற்குக் காட்டல் வேண்டி,இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்துபலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்துஆங்குஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்கூடிய நெறியின கொளுத்துங் காலைப்பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும்கொண்ட வகைஅறிந்து கூத்துவரு காலைக்கூடை செய்தகை வாரத்துக் களைதலும்வாரம் செய்தகை கூடையிற் களைதலும்பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும்ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்குரவையும் வரியும் விரவல செலுத்திஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும்,யாழும் குழலும் சீரும் மிடறும்தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின்இசைந்த பாடல் இசையுடன் படுத்துவரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித்தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்துத்தேசிகத் திருவின் ஓசை எல்லாம்ஆசுஇன்று உணர்ந்த அறிவினன் ஆகிக்கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்பகுதிப் பாடலும் கொளுத்துங் காலைவசைஅறு கேள்வி வகுத்தனன் விரிக்கும்அசையா மரபின் இசையோன் தானும்,இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்தமிழ்முழுது அறிந்த தன்மையன் ஆகிவேத்தியல் பொதுவியல் என்றுஇரு திறத்தின்நாட்டிய நன்னு஡ல் நன்கு கடைப்பிடித்துஇசையோன் வக்கிரித் திட்டத்தை உணர்ந்துஆங்குஅசையா மரபின் அதுபட வைத்துமாற்றார் செய்த வசைமொழி அறிந்துநாத்தொலைவு இல்லா நன்னு஡ல் புலவனும்,ஆடல் பாடல் இசையே தமிழேபண்ணே பாணி தூக்கே முடமேதேசிகம் என்றுஇவை ஆசின் உணர்ந்துகூடை நிலத்தைக் குறைவுஇன்று மிகுத்துஆங்குவார நிலத்தை வாங்குபு வாங்கிவாங்கிய வாரத்து யாழும் குழலும்ஏங்கிய மிடறும் இசைவன கேட்பக்கூர்உகிர்க் கரணம் குறிஅறிந்து சேர்த்திஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமைச்சித்திரக் கரணம் சிதைவுஇன்றி செலுத்தும்அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும்,சொல்லிய இயல்பினிற் சித்திர வஞ்சனைபுல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்வர்த்தனை நான்கும் மயல்அறப் பெய்துஆங்குஏற்றிய குரல்இளி என்றுஇரு நரம்பின்ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகிப்பண்அமை முழவின் கண்ணெறி அறிந்துதண்ணுமை முதல்வன் தன்னொடு பொருந்திவண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்துஆங்குஇசையோன் பாடிய இசையின் இயற்கைவந்தது வளர்த்து வருவது ஒற்றிஇன்புற இயக்கி இசைபட வைத்துவார நிலத்தைக் கேடுஇன்று வளர்த்துஆங்குஈர நிலத்தின் எழுத்துஎழுத்து ஆகவழுவின்று இசைக்கும் குழலோன் தானும்,ஈர்ஏழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின்ஓர்ஏழ் பாலை நிறுத்தல் வேண்டிவன்மையிற் கிடந்த தார பாகமும்மென்மையிற் கிடந்த குரலின் பாகமும்மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக்கைக்கிளை ஒழித்த பாகமும் பொற்புடைத்தளராத் தாரம் விளரிக்கு ஈத்துக்கிளைவழிப் பட்டனள், ஆங்கே கிளையும்தன்கிளை அழிவுகண்டு அவள்வயிற் சேரஏனை மகளிரும் கிளைவழிச் சேரமேலது உழையிளி கீழது கைக்கிளைவம்புஉறு மரபின் செம்பாலை ஆயதுஇறுதி ஆதி ஆக ஆங்குஅவைபெறுமுறை வந்த பெற்றியின் நீங்காதுபடுமலை செவ்வழி பகர்அரும் பாலைஎனக்குரல்குரல் ஆகத் தற்கிழமை திரிந்தபின்முன்னதன் வகையே முறைமையின் திரிந்துஆங்குஇளிமுத லாகிய ஏர்படு கிழமையும்கோடி விளரி மேற்செம் பாலைஎனநீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின்இணைநரம்பு உடையன அணைவுறக் கொண்டுஆங்குயாழ்மேற் பாலை இடமுறை மெலியக்குழல்மேற் கோடி வலமுறை மெலியவலிவும் மெலிவும் சமனும் எல்லாம்பொலியக் கோத்த புலமை யோனுடன்,எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅதுமண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டுபுண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டுநூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்கோல்அளவு இருபத்து நால்விரல் ஆகஎழுகோல் அகலத்து எண்கோல் நீளத்துஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகிஉத்தரப் பலகையொடு அரங்கின் பலகைவைத்த இடைநிலம் நாற்கோல் ஆகஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப்பூதரை எழுதி மேல்நிலை வைத்துத்தூண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்துஆங்குஒருமுக எழினியும் பொருமுக எழினியும்கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்துஆங்குஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்துமாலைத் தாமம் வளையுடன் நாற்றிவிருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்துப்பேர்இசை மன்னர் பெயர்ப்புறத்து எடுத்தசீர்இயல் வெண்குடைக் காம்புநனி கொண்டுகண்இடை நவமணி ஒழுக்கி மண்ணியநாவல்அம் பொலம்தகட்டு இடைநிலம் போக்கிக்காவல் வெண்குடை மன்னவன் கோயில்இந்திர சிறுவன் சயந்தன் ஆகெனவந்தனை செய்து வழிபடு தலைக்கோல்புண்ணிய நன்னீர் பொற்குடத்து ஏந்திமண்ணிய பின்னர் மாலை அணிந்துநலம்தரு நாளால் பொலம்பூண் ஓடைஅரசுஉவாத் தடக்கையில் பரசினர் கொண்டுமுரசுஎழுந்து இயம்பப் பல்இயம் ஆர்ப்பஅரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும்தேர்வலம் செய்து கவிகைக் கொடுப்பஊர்வலம் செய்து புகுந்துமுன் வைத்துஆங்கு,இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப,வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்துவலத்தூண் சேர்தல் வழக்குஎனப் பொருந்திஇந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்ததொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்சீர்இயல் பொலிய நீர்அல நீங்கவாரம் இரண்டும் வரிசையில் பாடப்பாடிய வாரத்து ஈற்றில்நின்று இசைக்கும்கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித்தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப்பின்வழி நின்றது முழவே, முழவொடுகூடிநின்று இசைத்தது ஆமந் திரிகைஆமந் திரிகையொடு அந்தரம் இன்றிக்கொட்டுஇரண்டு உடையதுஓர் மண்டிலம் ஆகக்கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கிவந்த முறையின் வழிமுறை வழாமல்அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்,மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப்பாற்பட நின்ற பாலைப் பண்மேல்நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்துமூன்றுஅளந்து ஒன்று கொட்டி அதனைஐந்துமண் டிலத்தால் கூடை போக்கிவந்தவா ரம்வழி மயங்கிய பின்றை,ஆறும் நாலும் அம்முறை போக்கிக்கூறிய ஐந்தின் கொள்கை போலப்பின்னையும் அம்முறை பேரிய பின்றை,பொன்இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தெனநாட்டிய நன்னு஡ல் நன்குகடைப் பிடித்துக்காட்டினள் ஆதலின், காவல் வேந்தன்இலைப்பூங் கோதை இயல்பினில் வழாமைத்தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறிவிதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சுஒருமுறை யாகப் பெற்றனள் அதுவேநூறுபத்து அடுக்கி எட்டுக்கடை நிறுத்தவீறுஉயர் பசும்பொன் பெறுவதுஇம் மாலை,மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎனமான்அமர் நோக்கிஓர் கூனிகைக் கொடுத்துநகர நம்பியர் திரிதரு மறுகில்பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த,மாமலர் நெடுங்கண் மாதவி மாலைகோவலன் வாங்கிக் கூனி தன்னொடுமணமனை புக்கு மாதவி தன்னொடுஅணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கிவிடுதல் அறியா விருப்பினன் ஆயினன்.வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்துஎன்.(வெண்பா)எண்ணும் எழுத்தும் இயல்ஐந்தும் பண்நான்கும்பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் - மண்ணின்மேல்போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன்வாக்கினால் ஆடரங்கில் வந்து.
பகிர்

விளக்கம்

மாதவியின் அரங்கேற்றம் ஒரு நாடகக் காட்சி மட்டுமல்ல; நடனத்தின் இலக்கணமும் இசையின் வகைகளும் கதைக்குள் வந்து நிற்கும் அத்தியாயம் இது. 'தலைக்கோல்' பெறும் தருணத்தில் மாதவி கலைஞனாகிறாள், கோவலனின் காதலியாகிறாள்.

வானவர் மகளிரின் சாபம் தீரும் பின்னணியைத் தொடக்கத்திலேயே சொல்வதால், இந்த அரங்கேற்றம் ஒரு மீட்பு என்ற பொருளையும் பெறுகிறது. அதே நேரத்தில் புகாரின் அரசவை ஒரு பெண்ணின் கலையைக் கொண்டாடுகிறது; அந்தக் கொண்டாட்டமே பின்னர் ஒரு வீட்டைக் காலிசெய்யப் போகிறது என்பதைப் பாடல் சொல்லாமல் சொல்கிறது.