காதை 2 · சிலப்பதிகாரம் · இளங்கோ அடிகள்
மங்கல வாழ்த்துப் பாடல்
(சிந்தியல் வெண்பாக்கள்)திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்வங்கண் உலகுஅளித்த லான்.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டுமேரு வலம்திரி தலான்.மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்மேநின்று தாஞ்சுரத்த லான்.பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்வீங்குநீர் வேலி உலகிற்கு அவன்குலத்தொடுஓங்கிப் பரந்துஒழுக லான்.(மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா)ஆங்கு,பொதியில் ஆயினும் இமயம் ஆயினும்பதிஎழு அறியாப் பழங்குடி கெழீஇயபொதுஅறு சிறப்பின் புகாரே ஆயினும்நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதைஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே.அதனால்,நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடுபோகம்நீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்ஈகைவான் கொடியன்னாள் ஈராறுஆண்டு அகவையாள்,அவளுந்தான்,போதில்ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும்தீதிலா வடமீனின் திறம்இவள் திறம்என்றும்மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்துக்காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன் பாள்மன்னோ,ஆங்கு,பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்தஒருதனிக் குடிகளொடு உயர்ந்தோங்கு செல்வத்தான்வருநிதி பிறர்க்குஆர்த்தும் மாசாத்து வான்என்பான்இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டுஆண்டு அகவையான்,அவனுந்தான்,மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம்பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்கண்டுஏத்தும் செவ்வேள்என்று இசைபோக்கிக் காதலால்கொண்டுஏத்தும் கிழமையான் கோவலன்என் பான்மன்னோ.அவரை,இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால்மணஅணி காண மகிழ்ந்தனர், மகிழ்ந்துழியானை எருத்தத்து அணிஇழையார் மேல்இரீஇமாநகர்க்கு ஈந்தார் மணம்.அவ்வழி,முரசுஇயம்பின, முருகுஅதிர்ந்தன,முறைஎழுந்தன பணிலம்,வெண்குடைஅரசுஎழுந்ததொர் படிஎழுந்தன,அகலுள்மங்கல அணிஎழுந்தது.மாலைதாழ் சென்னி வயிரமணித் துணகத்துநீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்வான்ஊர் மதியம் சகடுஅணைய வானத்துச்சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்தீவலம் செய்வது காண்பார்க்கண் நோன்புஎன்னை.விரையினர் மலரினர் விளங்கு மேனியர்உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்ஏந்துஇள முலையினர் இடித்த சுண்ணத்தர்விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகைமுளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்போதொடு விரிகூந்தல் பொலன்நறுங் கொடிஅன்னார்காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்தீதுஅறுக எனஏத்திச் சின்மலர் கொடுதுவிஅங்கண் உலகின் அருந்ததி அன்னாளைமங்கல நல்அமளி ஏற்றினார், தங்கியஇப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கைஉப்பாலைப் பொன்கோட்டு உழையதா எப்பாலும்செருமிகு சினவேல் செம்பியன்ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே.
விளக்கம்
திங்களையும் ஞாயிற்றையும் மீண்டும் மீண்டும் போற்றும் அனுபல்லவி. 'திங்களைப் போற்றுதும்' என்று இரண்டு முறை வருவது வெறும் திருப்பம் அல்ல; வாழ்த்து முடிந்து கதை தொடங்கும் வரை பாடல் தன்னைத்தானே நீட்டிக்கொள்கிறது.
ஒரு பெருங்காப்பியத்தை மங்கலமாகத் தொடங்கும் மரபு இது. ஆனால் இங்கே வாழ்த்தப்படுவது அரசன் அல்ல, உலகைக் காக்கும் ஒளியும் மழையும்; புகாரின் செல்வமும் அதைச் சார்ந்ததுதான் என்று பாடல் மறைமுகமாகச் சொல்கிறது.