காதை 7 · சிலப்பதிகாரம் · இளங்கோ அடிகள்

கடலாடு காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடிக்கள்அவிழ் பூம்பொழில் காமக் கடவுட்குக்கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடுவிருந்தாட்டு அயரும்ஓர் விஞ்சை வீரன்தென்திசை மருங்கின்ஓர் செழும்பதி தன்னுள்இந்திர விழவுகொண்டு எடுக்கும்நாள் இதுஎனக்கடுவிசை அவுணர் கணம்கொண்டு ஈண்டிக்கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்ததொடுகழல் மன்னற்குத் தொலைந்தனர் ஆகிநெஞ்சுஇருள் கூர நிகர்த்துமேல் விட்டவஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்திருந்துவேல் அண்ணற்குத் தேவர்கோன் ஏவஇருந்துபலி உண்ணும் இடனும் காண்குதும்,அமரா பதிகாத்து அமரனிற் பெற்றுத்தமரில் தந்து தகைசால் சிறப்பின்பொய்வகை இன்றிப் பூமியில் புணர்த்தஐவகை மன்றத்து அமைதியும் காண்குதும்,நாரதன் வீணை நயம்தெரி பாடலும்தோரிய மடந்தை வாரம் பாடலும்ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறையநாடகம் உருப்பசி நல்காள் ஆகிமங்கலம் இழப்ப வீணை மண்மிசைத்தங்குக இவள்எனச் சாபம் பெற்றமங்கை மாதவி வழிமுதல் தோன்றியஅங்குஅரவு அல்குல் ஆடலும் காண்குதும்,துவர்இதழ்ச் செவ்வாய்த் துடிஇடை யோயே.அமரர் தலைவனை வணங்குதும் யாம்எனச்சிமையத்து இமையமும் செழுநீர்க் கங்கையும்உஞ்சையம் பதியும் விஞ்சத்து அடவியும்வேங்கட மலையும் தாங்கா விளையுள்காவிரி நாடும் காட்டிப் பின்னர்ப்பூவிரி படப்பைப் புகார்மருங்கு எய்திச்சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டிமல்லல் மூதூர் மகிழ்விழாக் காண்போன்மாயோன் பாணியும் வருணப் பூதர்நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கைவான்ஊர் மதியமும் பாடிப் பின்னர்ச்சீர்இயல் பொலிய நீர்அல நீங்கப்பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத்திரிபுரம் எரியத் தேவர் வேண்டஎரிமுகப் பேர்அம்பு ஏவல் கேட்பஉமையவள் ஒருதிறன் ஆக ஓங்கியஇமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்,தேர்முன் நின்ற திசைமுகன் காணப்பாரதி ஆடிய வியன்பாண்ட ரங்கமும்,கஞ்சன் வஞ்சம் கடத்தற் காகஅஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்அல்லியத் தொகுதியும், அவுணன் கடந்தமல்லின் ஆடலும், மாக்கடல் நடுவண்நீர்த்திரை அரங்கத்து நிகர்த்துமுன் நின்றசூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும்,படைவீழ்த்து அவுணர் பையுள் எய்தக்குடைவீழ்த்து அவர்முன் ஆடிய குடையும்,வாணன் பேரூர் மறுகிடை நடந்துநீள்நிலம் அளந்தோன் ஆடிய குடமும்,ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்காமன் ஆடிய பேடி ஆடலும்,காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்,செருவெம் கோலம் அவுணர் நீங்கத்திருவின் செய்யோள் ஆடிய பாவையும்,வயல்உழை நின்று வடக்கு வாயிலுள்அயிராணி மடந்தை ஆடிய கடையமும்,அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின்நிலையும் படிதமும் நீங்கா மரபின்பதினோர் ஆடலும் பாட்டின் பகுதியும்விதிமாண் கொள்கையின் விளங்கக் காணாய்.தாதுஅவிழ் பூம்பொழில் இருந்துயான் கூறியமாதவி மரபின் மாதவி இவள்எனக்காதலிக்கு உரைத்துக் கண்டுமகிழ்வு எய்தியமேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும்,அந்தரத்து உள்ளோர் அறியா மரபின்வந்துகாண் குறு஡உம் வானவன் விழவும்ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொளஊடல் கோலமோடு இருந்தோன் உவப்பப்பத்துத் துவரினும் ஐந்து விரையினும்முப்பத்து இருவகை ஓமா லிகையினும்ஊறின நல்நீர் உரைத்தநெய் வாசம்நாறுஇருங் கூந்தல் நலம்பெற ஆட்டி,புகையில் புலர்த்திய பூமென் கூந்தலைவகைதொறும் மான்மதக் கொழுஞ்சேறு ஊட்டி,அலத்தகம் ஊட்டிய அம்செஞ் சீறடிநலத்தகு மெல்விரல் நல்அணி செறீஇப்,பரியகம் நூபுரம் பாடகம் சதங்கைஅரியகம் காலுக்கு அமைவுற அணிந்து,குறங்கு செறிதிரள் குறங்கினில் செறித்து,பிறங்கிய முத்தரை முப்பத்து இருகாழ்நிறம்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ,காமர் கண்டிகை தன்னொடு பின்னியதூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து,மத்தக மணியொடு வயிரம் கட்டியசித்திரச் சூடகம் செம்பொன் கைவளைபரியகம் வால்வளை பவழப் பல்வளைஅரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து,வாளைப் பகுவாய் வணக்குஉறு மோதிரம்கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறிகாந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து,சங்கிலி நுண்தொடர் பூண்ஞான் புனைவினைஅம்கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து,கயிற்கடை ஒழுகிய காமர் தூமணிசெயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்துஆங்குஇந்திர நீலத்து இடைஇடை திரண்டசந்திர பாணி தகைபெறு கடிப்பிணைஅங்காது அகவயின் அழகுற அணிந்து,தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரிதொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்குஅணிமைஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து,கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்துப்பாடுஅமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்,உருகெழு மூது஡ர் உவவுத்தலை வந்தெனப்பெருநீர் போகும் இரியல் மாக்களொடுமடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டுக்காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி,பொய்கைத் தாமரைப் புள்வாய் புலம்பவைகறை யாமம் வாரணம் காட்டவெள்ளி விளக்கம் நள்இருள் கடியத்தார்அணி மார்பனொடு பேர்அணி அணிந்துவான வண்கையன் அத்திரி ஏறமான்அமர் நோக்கியும் வையம் ஏறிக்கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பைமாடமலி மறுகின் பீடிகைத் தெருவின்மலர்அணி விளக்கத்து மணிவிளக்கு எடுத்துஆங்குஅலர்க்கொடி அறுகும் நெல்லும் வீசிமங்கலத் தாசியர் தம்கலன் ஒலிப்பஇருபுடை மருங்கினும் திரிவனர் பெயரும்திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்துமகர வாரி வளம்தந்து ஓங்கியநகர வீதி நடுவண் போகிக்கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்வேலை வாலுகத்து விரிதிரைப் பரப்பில்கூல மறுகில் கொடிஎடுத்து நுவலும்மாலைச் சேரி மருங்குசென்று எய்தி,வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும்பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்,செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்,காழியர் மோதகத்து ஊழ்உறு விளக்கமும்,கூவியர் கார்அகல் குடக்கால் விளக்கமும்,நொடைநவில் மகடூஉக் கடைகெழு விளக்கமும்,இடைஇடை மீன்விலை பகர்வோர் விளக்கமும்,இலங்குநீர் வரைப்பின் கலங்கரை விளக்கமும்,விலங்குவலைப் பரதவர் மீன்திமில் விளக்கமும்,பொழிபெயர் தேஎத்தர் ஒழியா விளக்கமும்,கழிபெரும் பண்டம் காவலர் விளக்கமும்எண்ணுவரம்பு அறியா இயைந்துஒருங்கு ஈண்டிஇடிக்கலப்பு அன்ன ஈர்அயில் மருங்கில்கடிப்பகை காணும் காட்சியது ஆகியவிரைமலர்த் தாமரை வீங்குநீர்ப் பரப்பின்மருத வேலியின் மாண்புறத் தோன்றும்கைதை வேலி நெய்தல்அம் கானல்பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்திநிரைநிரை எடுத்த புரைதீர் காட்சியமலைப்பல் தாரமும் கடல்பல் தாரமும்வளம்தலை மயங்கிய துளங்குகல இருக்கைஅரசுஇளங் குமரரும் உரிமைச் சுற்றமும்பரத குமரரும் பல்வேறு ஆயமும்ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும்தோடுகொள் மருங்கின் சூழ்தரல் எழினியும்விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன்தண்பதம் கொள்ளும் தலைநாள் போலவேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலைசாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றிக்கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்றுஇடம்கெட ஈண்டிய நால்வகை வருணத்துஅடங்காக் கம்பலை உடங்குஇயைந்து ஒலிப்ப,கடல்புலவு கடிந்த மடல்பூந் தாழைச்சிறைசெய் வேலி அகவயின் ஆங்குஓர்புன்னை நீழல் புதுமணல் பரப்பில்ஓவிய எழினி சூழஉடன் போக்கிவிதானித்துப் படுத்த வெண்கால் அமளிமிசைவருந்துபு நின்ற வசந்த மாலைகைத்திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கிக்கோவலன் தன்னொடும் கொள்கையின் இருந்தனள்மாமலர் நெடுங்கண் மாதவி தான்என.(வெண்பா)வேலை மடல்தாழை உட்பொதிந்த வெண்தோட்டுமாலைத் துயின்ற மணிவண்டு - காலைக்களிநறவம் தாதுஊதத் தோன்றிற்றே காமர்தெளிநிற வெங்கதிரோன் தேர்.
பகிர்

விளக்கம்

கடலாடு காதை காதலின் உச்சம். மாதவியும் கோவலனும் கடற்கரைக்குப் போகிறார்கள்; நீரில் விளையாடல், பாடல், இரவு — எல்லாம் இன்பமாக நிற்கிறது.

ஆனால் இந்த அத்தியாயம் கடலைக் காதலின் இடமாக மட்டுமல்ல, கரைந்து போகும் இடமாகவும் காட்டுகிறது. அலை வந்து மணலை அழிப்பது போல இந்த இன்பமும் அடுத்த அத்தியாயத்தில் கரைந்துவிடும்; கடலாடல் ஒரு விடைபெறுதலின் முன்னோட்டம்.