காதை 8 · சிலப்பதிகாரம் · இளங்கோ அடிகள்
கானல் வரி
(கட்டுரை)சித்திரப் படத்துள்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்துமைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்புஎய்திப்பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும்என்றுஇத்திறத்துக் குற்றம்நீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கிபண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல்கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ்நண்ணிய குறும்போக்கு என்று நாட்டியஎண்வகையால் இசைஎழீஇப்பண்வகையால் பரிவுதீர்ந்துமரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள்பயிர்வண்டின் கிளைபோலப் பல்நரம்பின் மிசைப்படரவார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல்ஏர்உடைப் பட்டடைஎன இசையோர் வகுத்தஎட்டு வகையின் இசைக்கர ணத்துப்பட்டவகைதன் செவியின்ஓர்த்(து)ஏவலன், பின் பாணி யாதுஎனக்கோவலன் கையாழ் நீட்ட, அவனும்காவிரியை நோக்கினவும் கடல்கானல் வரிப்பாணியும்மாதவிதன் மனம்மகிழ வாசித்தல் தொடங்குமன்.வேறு (ஆற்று வரி)திங்கள் மாலை வெண்குடையான்சென்னி செங்கோல் அதுஒச்சிக்கங்கை தன்னைப் புணர்ந்தாலும்புலவாய் வாழி காவேரி.கங்கை தன்னைப் புணர்ந்தாலும்புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.மங்கை மாதர் பெருங்கற்புஎன்றுஅறிந்தேன் வாழி காவேரி.மன்னும் மாலை வெண்குடையான்வளையாச் செங்கோல் அதுஓச்சிக்கன்னி தன்னைப் புணர்ந்தாலும்புலவாய் வாழி காவேரி.கன்னி தன்னைப் புணர்ந்தாலும்புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.மன்னும் மாதர் பெருங்கற்புஎன்றுஅறிந்தேன் வாழி காவேரி.உழவர் ஓதை மதகுஓதைஉடைநீர் ஓதை தண்பதங்கொள்விழவர் ஓதை சிறந்துஆர்ப்பநடந்தாய் வாழி காவேரி.விழவர் ஓதை சிறந்துஆர்ப்பநடந்த எல்லாம் வாய்காவாமழவர் ஓதை வளவன்தன்வளனே வாழி காவேரி.வேறு (சார்த்து வரி - முகச்சார்த்து)கரியமலர் நெடுங்கண் காரிகைமுன்கடல்தெய்வம் காட்டிக் காட்டிஅரியசூள் பொய்த்தார் அறன்இலர்என்றுஏழையம்யாங்கு அறிகோம் ஐயவிரிகதிர் வெண்மதியும் மீன்கணமும்ஆம்என்றே விளங்கும் வெள்ளைப்புரிவளையும் முத்தும்கண்டு ஆம்பல்பொதிஅவிழ்க்கும் புகாரே எம்மூர்.காதலர் ஆகிக் கழிக்கானல்கையுறைகொண்டு எம்பின் வந்தார்ஏதிலர் தாமாகி யாம்இரப்பநிற்பதையாங்கு அறிகோம் ஐயமாதரார் கண்ணும் மதிநிழல்நீர்இணைகொண்டு மலர்ந்த நீலப்போதும் அறியாது வண்டுஊசலாடும் புகாரே எம்மூர்.மோது முதுதிரையால் மொத்துண்டுபோந்துஅசைந்த முரல்வாய்ச் சங்கம்மாதர் வரிமணல்மேல் வண்டல்உழுதுஅழிப்ப மாழ்கி ஐயகோதை பரிந்துஅசைய மெல்விரலால்கொண்டுஓச்சும் குவளை மாலைப்போது சிறங்கணிப்பப் போவார்கண்போகாப் புகாரே எம்மூர்.வேறு (முகம் இல் வரி)துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுததோற்றம் மாய்வான்பொறைமலி பூம்புன்னைப் பூஉதிர்ந்து நுண்தாதுபோர்க்கும் கானல்நிறைமதி வாள்முகத்து நேர்க்கயல்கண் செய்தஉறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையேதீர்க்கும் போலும்.(கானல் வரி)நிணம்கொள் புலால்உணங்கல் நின்றுபுள் ஓப்புதல்தலைக்கீடு ஆகக்கணம்கொள் வண்டுஆர்த்து உலாம்கன்னி நறுஞாழல்கையில் ஏந்திமணம்கமழ் பூங்கானல் மன்னிமற்று ஆண்டுஓர்அணங்குஉறையும் என்பது அறியேன் அறிவேனேல்அடையேன் மன்னோ.வலைவாழ்நர் சேரி வலைஉணங்கும் முன்றில்மலர்கை ஏந்திவிலைமீன் உணங்கல் பொருட்டாக வேண்டுஉருவம்கொண்டு வேறுஓர்கொலைவேல் நெடுங்கண் கொடுங்கூற்றம் வாழ்வதுஅலைநீர்த்தண் கானல் அறியேன் அறிவேனேல்அடையேன் மன்னோ.வேறு (நிலைவரி)கயல்எழுதி வில்எழுதிக் கார்எழுதிக் காமன்செயல்எழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்.திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கேஅம்கண்ஏர் வானத்து அரவுஅஞ்சி வாழ்வதுவே.எறிவளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஓடும்கறைகெழுவேல் கண்ணோ கடுங்கூற்றம் காணீர்.கடுங்கூற்றம் காணீர் கடல்வாழ்நர் சீறூர்க்கேமடம்கெழுமென் சாயல் மகளா யதுவே.புலவுமீன் வெள்உணங்கல் புள்ஓப்பிக் கண்டார்க்குஅலவநோய் செய்யும் அணங்குஇதுவோ காணீர்.அணங்குஇதுவோ காணீர் அடும்புஅமர்த்தண் கானல்பிணங்குநேர் ஐம்பால்ஓர் பெண்கொண் டதுவே.வேறு (முரிவரி)பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலேபழுதுஅறு திருமொழியே பணைஇள வனமுலையேமுழுமதி புரைமுகமே முரிபுரு வில்இணையேஎழுதுஅரு மின்இடையே எனைஇடர் செய்தவையே.திரைவிரி தருதுறையே திருமணல் விரிஇடமேவிரைவிரி நறுமலரே மிடைதரு பொழில்இடமேமருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமேஇருகயல் இணைவிழியே எனைஇடர் செய்தவையே.வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலேதளைஅவிழ் நறுமலரே தனிஅவள் திரிஇடமேமுளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமேஇளையவள் இணைமுலையே எனைஇடர் செய்தவையே.வேறு (திணை நிலைவரி)கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர்உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும்மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய்.கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தைநெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்வடம்கொள் முலையால் மழைமின்னுப் போலநுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய்.ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர்கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும்பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்துவாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய்.வேறுபவள உலக்கை கையால் பற்றித்தவள முத்தம் குறுவாள் செங்கண்தவள முத்தம் குறுவாள் செங்கண்குவளை அல்ல கொடிய கொடியபுன்னை நீழல் புலவுத் திரைவாய்அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்கொன்னே வெய்ய. கூற்றம் கூற்றம்.கள்வாய் நீலம் கையின் ஏந்திப்புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்வெள்வேல் அல்ல. வெய்ய வெய்ய.வேறுசேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்ஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பின்சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்.(கட்டுரை)ஆங்கு, கானல்வரிப் பாடல்கேட்டமான்நெடுங்கண் மாதவியும்மன்னும்ஓர் குறிப்புஉண்டுஇவன்தன்நிலை மயங்கினான்எனக்கலவியால் மகிழ்ந்தாள்போல்புலவியால் யாழ்வாங்கித்தானும்ஓர் குறிப்பினள்போல்கானல்வரிப் பாடல்பாணிநிலத்தெய்வம் வியப்புஎய்தநீள்நிலத்தோர் மனம்மகிழக்கலத்தொடு புணர்ந்துஅமைந்தகண்டத்தால் பாடத்தொடங்கும்மன்.வேறு (ஆற்று வரி)மருங்கு வண்டு சிறந்துஆர்ப்பமணிப்பூ ஆடை அதுபோர்த்துக்கருங்க யல்கண் விழித்துஒல்கிநடந்தாய் வாழி காவேரி.கருங்க யல்கண் விழித்துஒல்கிநடந்த எல்லாம் நின்கணவன்திருந்து செங்கோல் வளையாமைஅறிந்தேன் வாழி காவேரி.பூவர் சோலை மயில்ஆலப்புரிந்து குயில்கள் இசைபாடக்காமர் மாலை அருகுஅசையநடந்தாய் வாழி காவேரி.காமர் மாலை அருகுஅசையநடந்த எல்லாம் நின்கணவன்நாம வேலின் திறம்கண்டேஅறிந்தேன் வாழி காவேரி.வாழி அவன்தன் வளநாடுமகவாய் வளர்க்கும் தாய்ஆகிஊழி உய்க்கும் பேர்உதவிஒழியாய் வாழி காவேரி.ஊழி உய்க்கும் பேர்உதவிஒழியாது ஒழுகல் உயிர்ஓம்பும்ஆழி ஆள்வான் பகல்வெய்யோன்அருளே வாழி காவேரி.வேறு (சார்த்து வரி)தீங்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வா வேனும்வாங்கும்நீர் முத்துஎன்று வைகலும் மால்மகன்போல் வருதிர் ஐயவீங்குஓதம் தந்து விளங்குஒளிய வெண்முத்தம் விரைசூழ் கானல்பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும் புகாரே எம்மூர்.மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கைஇறைவளைகள் துற்றுவதை ஏழையம் எங்ஙனம்யாங்கு அறிகோம் ஐயநிறைமதியும் மீனும் எனஅன்னம் நீள்புன்னை அரும்பிப் பூத்தபொறைமலிபூங் கொம்புஏற வண்டுஆம்பல் ஊதும் புகாரே எம்மூர்.உண்டாரை வெல்நறா ஊண்ஓழியாப் பாக்கத்துள் உறைஒன்று இன்றித்தண்டாநோய் மாதர் தலைத்தருதி என்பதுயாங்கு அறிகோம் ஐயவண்டல் திரைஅழிப்பக் கையால் மணல்முகந்து மதிமேல் நீண்டபுண்தோய்வேல் நீர்மல்க பரதர் கடல்துர்க்கும் புகாரே எம்மூர்.வேறு (திணை நிலைவரி)புணர்த்துணையோடு ஆடும் பொறிஅலவன் நோக்கிஇணர்த்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கிஉணர்வுஒழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன்வணர்சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால்.தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்கஅம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்.புன்கண்கூர் மாலைப் புலம்பும்என் கண்ணேபோல்துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால்இன்கள்வாய் நெய்தால்நீ எய்தும் கனவினுள்வன்கணார் கானல் வரக்கண்டு அறிதியோ?புள்இயல்மான் தேர்ஆழி போன வழிஎல்லாம்தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எஞ்செய்கோ?தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எம்மோடுஈங்குஉள்ளாரோடு உள்ளாய் உணராய்மற்று எஞ்செய்கோ?நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்ஊர்ந்த வழிசிதைய ஊர்க்கின்ற ஓதமேபூந்தண் பொழிலே புணர்ந்துஆடும் அன்னமேஈர்ந்தண் துறையே இதுதகாது என்னீரே.நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்வாழி கடல்ஓதம்ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்மற்(று) எம்மொடுதீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடல்ஓதம்.வேறு (மயங்கு திணை நிலைவரி)நன்நித் திலத்தின் பூண்அணிந்துநலம்சார் பவளக் கலைஉடுத்துச்செந்நெல் பழனக் கழனிதொறும்திரைஉ லாவு கடல்சேர்ப்ப.புன்னைப் பொதும்பர் மகரத்திண்கொடியோன் எய்த புதுப்புண்கள்என்னைக் காணா வகைமறத்தால்அன்னை காணின் என்செய்கோ?வாரித் தரள நகைசெய்துவண்செம் பவள வாய்மலர்ந்துசேரிப் பரதர் வலைமுன்றில்திரைஉ லாவு கடல்சேர்ப்ப.மாரிப் பீரத்து அலர்வண்ணம்மடவாள் கொள்ளக் கடவுள்வரைந்துஆர்இக் கொடுமை செய்தார்என்றுஅன்னை அறியின் என்செய்கோ?புலவுற்று இரங்கி அதுநீங்கப்பொழில்தண் டலையில் புகுந்துஉதிர்ந்தகலவைச் செம்மல் மணம்கமழத்திரைஉ லாவு கடல்சேர்ப்ப.பலஉற்று ஒருநோய் திணியாதபடர்நோய் மடவாள் தனிஉழப்பஅலவுற்று இரங்கி அறியாநோய்அன்னை அறியின் என்செய்கோ?வேறுஇளைஇருள் பரந்ததுவே எல்செய்வான் மறைந்தனனேகளைவுஅரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவேதளைஅவிழ் மலர்க்குழலாய் தணந்தார்நாட்டு உளதாம்கொல்வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருள்மாலை?கதிரவன் மறைந்தனனே கார்இருள் பரந்ததுவேஎதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர் உகுத்தனவேபுதுமதி புரைமுகத்தாய் போனார்நாட்டு உளதாம்கொல்மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை?பறவைபாட்டு அடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனேநிறைநிலா நோய்கூர நெடுங்கண்நீர் உகுத்தனவேதுறுமலர் அவிழ்குழலாய் துறந்தார்நாட்டு உளதாம்கொல்மறவையாய் என்உயிர்மேல் வந்தஇம் மருள்மாலை?வேறு (சாயல் வரி)கைதை வேலிக் கழிவாய் வந்துஎம்பொய்தல் அழித்துப் போனார் ஒருவர்பொய்தல் அழித்துப் போனார் அவர்நம்மையல் மனம்விட்டு அகல்வார் அல்லர்.கானல் வேலிக் கழிவாய் வந்துநீநல்கு என்றே நின்றார் ஒருவர்நீநல்கு என்றே நின்றார் அவர்நம்மான்நேர் நோக்கம் மறப்பார் அல்லர்.அன்னம் துணையோடு ஆடக் கண்டுநென்னல் நோக்கி நின்றார் ஒருவர்நென்னல் நோக்கி நின்றார் அவர்நம்பொன்நேர் சுணங்கிற் போவார் அல்லர்.வேறு (முகம் இல் வரி)அடையல் குருகே அடையல்எம் கானல்அடையல் குருகே அடையல்எம் கானல்உடைதிரைநீர்ச் சேர்ப்பற்கு உறுநோய் உரையாய்அடையல் குருகே அடையல்எம் கானல்.வேறு (காடுரை)ஆங்கனம் பாடிய ஆயிழை பின்னரும்காந்தள் மெல்விரல் கைக்கிளை சேர்குரல்தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசைஎழீஇப்பாங்கினில் பாடிஓர் பண்ணும் பெயர்த்தாள்.வேறு (முகம் இல் வரி)நுளையர் விளரி நொடிதரும்தீம் பாலைஇளிகிளையில் கொள்ள இறுத்தாயால் மாலைஇளிகிளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்கொளைவல்லாய் என்ஆவி கொள்வாழி மாலை.பிரிந்தார் பரிந்துஉரைத்த பேர்அருளின் நீழல்இருந்துஏங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலைஉயிர்ப்புறத்தாய் நீஆகில் உள்ஆற்றா வேந்தன்எயில்புறத்து வேந்தனோடு என்ஆதி மாலை.பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழவையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலைமாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின்ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை.வேறுதீத்துழை வந்தஇச் செல்லல் மருள்மாலைதூக்காது துணிந்தஇத் துயர்எஞ்சு கிளவியால்பூக்கமழ் கனலில் பொய்ச்சூள் பொறுக்க என்றுமாக்கடல் தெய்வம்நின் மலர்அடி வணங்குதும்.வேறு (கட்டுரை)எனக்கேட்டு,கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின்மேல் மனம்வைத்துமாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்எனயாழ்இசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந்து உருத்ததுஆகலின்உவவுஉற்ற திங்கள்முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்ப்பொழுதுஈங்குக் கழிந்ததுஆகலின் எழுதும்என்று உடன்எழாதுஏவலாளர் உடஞ்சூழக் கோவலன்தான் போனபின்னர்,தாதுஅவிழ் மலர்ச்சோலை ஓதைஆயத்து ஒலிஅவித்துக்கையற்ற நெஞ்சினளாய் வையத்தி னுள்புக்குக்காதலனுடன் அன்றியே மாதவிதன் மனைபுக்காள்ஆங்கு,மாயிரு ஞாலத்து அரசு தலைவணக்கும்சூழி யானைச் சுடர்வாள் செம்பியன்மாலை வெண்குடை கவிப்பஆழி மால்வரை அகவையா எனவே.
விளக்கம்
இந்த அத்தியாயம் கிட்டத்தட்ட முழுவதும் பாட்டு — மணல் திட்டில் பாடப்படும் 'கானல் வரி'. இடையே ஒரு உரைநடைக் கட்டுரை வந்து பாடல்களை இணைக்கிறது; சிலம்பின் பாடல்-உரைக் கலப்பு இங்கே தெளிவாகத் தெரிகிறது.
கானல் என்பது கானல் நீர் போன்றது: தொலைவில் நீர் இருப்பது போல் தெரியும், அருகில் போனால் மணல். இந்தக் காதையின் இறுதியில் ஊடல் முற்றுகிறது; மாதவியை விட்டு விலகுவது அடுத்த காதையில் நடக்கிறது.