பாடல் 68 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 68 · அம்புலிப் பருவம்
சொற்றலரிய பழம்பாடற் சுருதிப்பொருளேஈர்ந் துளதுணிவாற்சுவேத முனிகா லனைக்கடந்து சுகம்பெற்றிடலித் தலமலவோகொற்ற மிகுமாற்றங்கரையிற் கொடிதாம்இகலோர் உடனுறல்போய்க்கோதை இவள்பூங் கழற்றுணையிற் குலவுமினத்திற் கூடிடலாம்கற்ற தமிழ்நா வலரிசைத்தேன் களித்துண்டிடலாம் அறம்வளர்த்தகையால் அழைப்ப தறிந்திலையோகரும்பு தின்னக் கூலியுண்டோஅற்ற மிதுபோல் வாய்ப்பரிதால் ஆடவாராய் அம்புலியேஅருள்வேய் வனத்தெம் அரசியுடன்ஆடவாராய் அம்புலியே.