பாடல் 71 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 71 · அம்மானைப் பருவம்

இரசித விலங்கலொத்துலவியம ராபதிக்கிறைமகிழ வரும்வாரணம்இகல்கதுவும் உற்கைக ளெனப்பயந் தோடவெளிதிம்பர்நின் றும்பர்தாவிப்பிரசமல ரைந்தருவில் விளையாடு மந்திபலபில்குதேங் கனிகளெனவுட்பெருமிதத் திற்கருங் கைநீட்டி முயலமெய்ப்பிரணவம் பொலியும் வேதச்சிரசினில் நடித்திடுநின் முகமதியை வேட்டெழுஞ்சேதாம்பல் மாதர்சுற்றித்திரிவது கடுப்பநின் செங்கையம் பங்கயத்தேவியரை மேவிமீளும்அரசிளம் பரிதிக ளெனப்பதும் ராகமணிஅம்மானை யாடியருளேஅழகார்ந்த திருநெல்லை மகிழ்காந்தி மதிவல்லிஅம்மானை யாடியருளே.
பகிர்