பாடல் 76 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 76 · அம்மானைப் பருவம்
பாடற் கலைவா ணியுந்திருவும் பலகுற்றேவல் புரிந்திடப்பின்படர்குஞ் சினநேர் மெய்யடியார் பண்பின்அளவிற் பயனனந்தம்வீடற்பொடுதந் தருள்கருணை மீனத்தடங்கண் இருமருங்கும்வெங்கா ளிமம்நச் சிருட்படலம் மிடையுந்தனிக்கந் தரப்பெருமான்ஊடற் கலகந் தனில்விலைநா னுனக்கென்றெழுதி ஒப்பமும்வைத்துதவுங் கிரய சாதனப்பொன் னோலைக்குழைதொட்ட லைத்தாட்டஆடற் கொடிநெல் வேலியுமை ஆடிஅருளா யம்மானைஅறமெண் ணான்கும் வளர்த்தசெல்விஆடி அருளா யம்மானை.