பாடல் 73 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 73 · அம்மானைப் பருவம்

மண்டுமலர் மணமல தியற்கைமண மலிதருநின்வார்குழற் கிணையாமெனும்வல்லிரு ளினைப்பாதி மதிநுதற் கணைதொட்டுவளைபுருவ விற்சமரில்நீகண்டதுண் டம்பல படுத்தியும் அவற்றினைக்கந்துகத் தாடலேய்ப்பக்காமனை யெரித்தும் உன தாசைமேற் கொண்டுவளர்கழைவனச் சிவயோகிபால்வெண்டரள முறுவலொடும் அம்மைநீ தூதுக்குவிடுகுயில்க ளென்னநின்கைமென்கமல மலர்மீது பல்காற் பறந்துநனிவீழுமறு கால்நிகர்ப்பஅண்டமும் அகண்டமும் நிறைந்தாடு வாய்நீலஅம்மானை யாடியருளேஅழகார்ந்த திருநெல்லை மகிழ்காந்தி மதிவல்லஅம்மானை யாடியருளே.
பகிர்