மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப்பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும்பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி,தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தைதளிர்ப்புரையும் திருவடியென் தலைமே லவ்வே. (2)
Thirunedundhandakam
திருநெடுந்தாண்டகம் · Thirumangai Alvar
திருமங்கையாழ்வாரின் முப்பது நீண்ட பாடல்கள். பிரபஞ்சத்தின் உருவங்களாக இறைவனை விளித்து, "நெஞ்சே" என்று தம் மனத்தைத் திரும்ப அழைக்கும் பாடல்கள்.
Thirty long verses of Thirumangai Alvar, calling the Lord by every form the universe takes and then turning to his own heart with the word "O mind".
அறிமுகம்
நெடுந்தாண்டகத்தின் அடிகள் நீளமானவை; ஒவ்வொரு பாடலும் ஒரு ஊரை, ஒரு தலத்தை, ஒரு புராணத்தை நோக்கி நகர்கிறது. இடையிடையே "நெஞ்சே" என்ற கூப்பாடு வரும். அதாவது பாடுபவர் தம்மைத் தானே திரும்ப அழைக்கிறார்.
இந்தப் பிரபந்தம் ஒரு பயணம் போல நடக்கிறது. தலம் தலமாகச் சென்று, கடைசியில் மனத்தின் கதவில் நிற்கிறது.
Introduction
The lines of Thirunedundhandakam are long, and each verse travels toward a town, a shrine, a puranic story. In between comes the call "O mind", which means the singer is calling himself back.
The prabandham moves like a journey: shrine after shrine, until it stops at the door of the mind.
பாடல்களும் பொருளும் The verses and their meaning
பாருருவில் நீரெரிகால் விசும்பு மாகிப்பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற,ஏருருவில் மூவருமே யென்ன நின்ற,இமையவர்தந் திருவுருவே றெண்ணும் போது,ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீஒன்றுமா கடலுருவம் ஒத்து நின்ற,மூவுருவும் கண்டபோ தொன்றாம் சோதிமுகிலுருவம் எம்மடிகள் உருவந் தானே.
திருவடிவில் கருநெடுமால் சேயன் என்றும்திரேதைக்கண் வளையுருவாய்த் திகழ்ந்தா னென்றும்,பொருவடிவில் கடலமுதம் கொண்ட காலம்பெருமானைக் கருநீல வண்ணன் றன்னை,ஒருவடிவத் தோருருவென் றுணர லாகாஊழிதோ றூழிநின் றேத்தல் அல்லால்,கருவடிவில் செங்கண்ண வண்ணன் றன்னைக்கட்டுரையே யாரொருவர் காண்கிற் பாரே?
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் றன்னைஇருநிலம்கால் தீநீர்விண் பூதம் ஐந்தாய்,செந்திறத்த தமிழோசை வடசொல் லாகித்திசைநான்கு மாய்த்திங்கள் ஞாயி றாகி,அந்தரத்தில் தேவர்க்கும் அறிய லாகாஅந்தணனை அந்தணர்மாட் டந்தி வைத்தமந்திரத்தை, மந்திரத்தால் மறவா தென்றும்வாழுதியேல் வாழலாம் மடநெஞ் சம்மே.
ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்பஒருகாலுங் காமருசீர் அவுணன் உள்ளத்து,எண்மதியுங் கடந்தண்ட மீது போகிஇருவிசும்பி னூடுபோ யெழுந்து மேலைத்தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித்தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு,மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தைமலர்புரையும் திருவடியே வணங்கி னேனே.
அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன்அஞ்சிறைப்புள் தனிப்பாகன் அவுணர்க் கென்றும்,சலம்புரிந்தங் கருளில்லாத் தன்மை யாளன்தானுகந்த வூரெல்லாம் தந்தாள் பாடி,நிலம்பரந்து வரும்கலுழிப் பெண்ணை யீர்த்தநெடுவேய்கள் படுமுத்த முந்த வுந்தி,புலம்பரந்த பொன்விளைக்கும் பொய்கை வேலிப்பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே.
வற்புடைய வரைநெடுந்தோள் மன்னர் மாளவடிவாய மழுவேந்தி யுலக மாண்டு,வெற்புடைய நெடுங்கடலுள் தனிவே லுய்த்தவேள்முதலா வென்றானூர் விந்தம் மேய,கற்புடைய மடக்கன்னி காவல் பூண்டகடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி,பொற்புடைய மலையரையன் பணிய நின்றபூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே.
நீரகத்தாய். நெடுவரையி னுச்சி மேலாய்.நிலாத்திங்கள் துண்டகத்தாய். நிறைந்த கச்சிஊரகத்தாய், ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய்.உள்ளுவா ருள்ளத்தாய், உலக மேத்தும்காரகத்தாய். கார்வானத் துள்ளாய். கள்வா.காமருபூங் காவிரியின் தென்பால் மன்னுபேரகத்தாய், பேராதென் நெஞ்சி னுள்ளாய்.பெருமான்உன் திருவடியே பேணி னேனே. (2)
வங்கத்தால் மாமணிவந் துந்து முந்நீர்மல்லையாய். மதிள்கச்சி யூராய். பேராய்,கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன்குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான்,பங்கத்தாய். பாற்கடலாய். பாரின் மேலாய்.பனிவரையி னுச்சியாய். பவள வண்ணா,எங்குற்றாய் எம்பெருமான். உன்னை நாடிஏழையேன் இங்கனமே ஊழிதரு கேனே.
பொன்னானாய். பொழிலேழும் காவல் பூண்டபுகழானாய். இகழ்வாய தொண்ட னேன்நான்,என்னானாய்? என்னானாய்? என்னல் அல்லால்என்னறிவ னேழையேன், உலக மேத்தும்தென்னானாய் வடவானாய் குடபா லானாய்குணபால தாயினாய் இமையோர்க் கென்றும்முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி.திருமூழிக் களத்தானாய் முதலா னாயே.
பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள்பனிநெடுங்கண் ணீர்ததும்பப் பள்ளி கொள்ளாள்,எட்டனைப்போ தெங்குடங்கால் இருக்க கில்லாள்எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல்மடமானை இதுசெய்தார் தம்மை, மெய்யேகட்டுவிச்சி சொல் , என்னச் சொன்னாள் நங்காய்.கடல்வண்ண ரிதுசெய்தார் காப்பா ராரே?
நெஞ்சுருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும்நெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம் பேணாள்,நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீ. என்னும்வம்பார்பூம் வயலாலி மைந்தா என்னும்,அஞ்சிறைய புட்கொடியே யாடும் பாடும்அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்,எஞ்சிறகின் கீழடங்காப் பெண்ணைப் பெற்றேன்இருநிலத்துஓர் பழிபடைத்தேன் ஏபா வம்மே.
கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய். என்றும்காமருபூங் கச்சியூ ரகத்தாய். என்றும்,வில்லிறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தாய். என்றும்வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே. என்றும்,,அல்லடர்த்து மல்லரையன் றட்டாய். என்றும்,மாகீண்ட கத்தலத்தென் மைந்தா. என்றும்,சொல்லெடுத்துத் தங்கிளியைச் சொல்லே என்றுதுணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே.
முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவாமூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற,அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேயஅந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை,விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில்வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டுவளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக. என்றுமடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே.
கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேயகளிறென்றும் கடல்கிடந்த கனியே. என்றும்,அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலிஅணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும்,சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித்தூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு,மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கேமென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே.
கன்றுமேய்த் தினிதுகந்த காளாய். என்றும்,கடிபொழில்சூழ் கணபுரத்தென் கனியே. என்றும்,மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய். என்றும்,வடதிருவேங் கடம்மேய மைந்தா. என்றும்,வென்றசுரர் குலங்களைந்த வேந்தே. என்றும்,விரிபொழில்சூழ் திருநறையூர் நின்றாய். என்றும்,துன்றுகுழல் கருநிறத்தென் துணையே என்றும்துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே. (2)
பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூப்பப்பொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்றுசெங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும்சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து, ஆங்கேதண்காலும் தண்குடந்தை நகரும் பாடித்தண்கோவ லூர்ப்பாடி யாடக் கேட்டு,நங்காய்.நங் குடிக்கிதுவோ நன்மை? என்னநறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே.
கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம்,பார்வண்ண மடமங்கை பித்தர் பித்தர்பனிமலர்மேல் பாவைக்குப் பாவம் செய்தேன்,ஏர்வண்ண என்பேதை எஞ்சொல் கேளாள்எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்,நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்இதுவன்றோ நிறையழிந்தார் நிற்கு மாறே?
முற்றாரா வனமுலையாள் பாவை மாயன்மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டும்அற்றாள்,தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள்அணியரங்க மாடுதுமோ தோழீ. என்னும்,பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள்பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி,பொற்றாம ரைக்கயம்நீ ராடப் போனாள்பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே.
தோராளும் வாளரக்கன் செல்வம் மாளத்தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீ ஒல்கி,பேராள னாயிரம் வாணன் மாளப்பொருகடலை யரண்கடந்து புக்கு மிக்கபாராளன், பாரிடந்து பாரை யுண்டுபாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்டபேராளன், பேரோதும் பெண்ணை மண்மேல்பெருந்தவத்தள் என்றல்லால் பேச லாமே?
மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழமகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட,எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கேஇருவராய் வந்தாரென் முன்னே நின்றார்கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும்கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே,அவ்வண்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ.அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே. (2)
நைவளமொன் றாராயா நம்மை நோக்காநாணினார் போலிறையே நயங்கள் பின்னும்,செய்வளவி லென்மனமும் கண்ணு மோடிஎம்பெருமான் திருவடிக்கீழ் அணைய, இப்பால்கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன்கனமகரக் குழையிரண்டும் நான்கு தோளும்,எவ்வளவுண் டெம்பெருமான் கோயில்? என்றேற்குஇதுவன்றோ எழிலாலி? என்றார் தாமே.
உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்தென்ஒளிவளையும் மாநிறமும் கொண்டா ரிங்கே,தெள்ளூரு மிளந்தெங்கின் தேறல் மாந்திச்சேலுகளும் திருவரங்கம் நம்மூ ரென்னக்கள்ளூரும் பைந்துழாய் மாலை யானைக்கனவிடத்தில் யான்காண்பன் கண்ட போது,புள்ளூரும் கள்வாநீ போகேல், என்பன்என்றாலு மிதுநமக்கோர் புலவி தானே?
இருகையில்சங் கிவைநில்லா எல்லே பாவம்.இலங்கொலிநீர் பெரும்பௌவம் மண்டி யுண்ட,பெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ணம்பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழஒருகையில்சங் கொருகைமற் றாழி யேந்திஉலகுண்ட பெருவாய ரிங்கே வந்து,என்பொருகயல்கண் ணீரரும்பப் புலவி தந்துபுனலரங்க மூரென்று போயி நாரே.
மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும்கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்,தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழேதாழ்ந்திலங்கும் மகரம்சேர் குழையும் காட்டிஎன்னலனும் என்னிறையும் எஞ்சிந் தையும்என்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு,பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலி னூடேபுனலரங்க மூரென்று போயி னாரே.
தேமருவு பொழிலிடத்து மலாந்த போதைத்தேனதனை வாய்மடுத்துன் பெடையும் நீயும்,பூமருவி யினிதமர்ந்து பொறியி லார்ந்தஅறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை,ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான்அணியழுந்தூர் நின்றானுக் கின்றே சென்று,நீமருவி யஞ்சாதே நின்றோர் மாதுநின்நயந்தாள் என்றிறையே இயம்பிக் காணே.
செங்கால மடநாராய். இன்றே சென்றுதிருக்கண்ண புரம்புக்கென் செங்கண் மாலுக்கு,எங்காத லென்துணைவர்க் குரைத்தி யாகில்இதுவொப்ப தெமக்கின்ப மில்லை, நாளும்பைங்கானம் ஈதெல்லாம் உனதே யாகப்பழனமீன் கவர்ந்துண்ணத் தருவன், தந்தால்இங்கேவந் தினிதிருந்துன் பெடையும் நீயும்இருநிலத்தி லினிதின்ப மெய்த லாமே. (2)
தென்னிலங்கை யரண்சிதறி அவுணன் மாளச்சென்றுலக மூன்றினையும் திரிந்தோர் தேரால்,மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்தவரையுருவின் மாகளிற்றைத் தோழீ, என்றன்பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டுபோகாமை வல்லேனாய்ப் புலவி யெய்தி,என்னிலங்க மெல்லாம்வந் தின்ப மெய்தஎப்பொழுதும் நினைந்துருகி யிருப்பன் நானே.
அன்றாயர் குலமகளுக் கரையன் றன்னைஅலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் றன்னை,குன்றாத வலியரக்கர் கோனை மாளக்கொடுஞ்சிலைவாய்ச் சரந்துரந்து குலங்க ளைந்துவென்றானை, குன்றெடுத்த தோளி னானைவிரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்நின்றானை, தண்குடந்தைக் கிடந்த மாலைநெடியானை அடிநாயேன் நினைந்திட் டேனே. (2)
மின்னுமா மழைதவழும் மேக வண்ணா.விண்ணவர்தம் பெருமானே. அருளாய், என்று,அன்னமாய் முனிவரோ டமர ரேத்தஅருமறையை வெளிப்படுத்த அம்மான் றன்னை,மன்னுமா மணிமாட வேந்தன்மானவேல் பரகாலன் கலியன் சொன்னபன்னிய_ல் தமிழ்மாலை வல்லார் தொல்லைப்பழவினையை முதலரிய வல்லார் தாமே. (2) 30கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த,பொய்கைப் பிரான்கவிஞர் போரேறு, - வையத்துஅடியவர் வாழ அருந்தமிழந் தாதி,படிவிளங்கச் செய்தான் பரிந்து
திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்
திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்
சிந்தனைக்கு
தலம் தலமாக அலைந்து கடைசியில் மனத்திடம் வந்து நிற்பது எல்லா யாத்திரையின் முடிவா?
To reflect on
Does every pilgrimage end by arriving at the mind?