பாடல் 28 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 28 · தாலப் பருவம்

அருமறையிளின் உபநிடத நன்முடி மிசை அமர் வேல் கயலாகஅழகு செய் இருவிழி அறிதுயில் புரி உனை அறியா அடியேங்கள்ஒரு சிறு மகவு என மனதினில் நினைவு செய்து ஓம்புதல் போலாகஉற்றிடு பேதையை பெற்ற புல்லறிவை இவ்வுலகத்தவர் அறியக்கருமணி கால் இரணியம் அது பலகை கவின் சேர் வடமாகக்கதிர்மணியில் புரி தொட்டிலையும் ஒரு பொருளாய்க் கண்வளர்வாய்தரும நன்னெறி வளர் சக கயிலையின் மயில் தாலோ தாலேலோ!சங்கர நாரணர் பங்கினுறுங் கிளி தாலோ தாலேலோ!
பகிர்