பாடல் 29 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 29 · தாலப் பருவம்
புண்டரிகத்தில் இருந்து விதித்திடு போதாவும்பொன்றிடு மட்டும் உயிர்க்குறு போகம் இது என்று ஓதிக்கண்டிதம் இட்ட எழுத்தையும் மாமகிடத்து ஏறிக்கண்கள் சிவக்க உருத்து வெறுத்திடுகால் கோபங்கொண்டு பிடித்திடு தத்தையுமே குளிர் பொற்பாதங்கும்பிடு பத்தியருக்கு விலக்கு குணத்தாயேதண்டலை சுற்றிய புன்னைவனக் குயில்தாலே தாலேலோ!சங்கர நாரணர் பங்கில் உறுங் கிளி தாலோ தாலேலோ!