பாடல் 33 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 33 · சப்பாணிப் பருவம்

திரு மருவு கயிலைவரை தன்னில் ஒரு ஞான்றுதென் பொதிய வரையில் பிறந்தசிறுகால் தவழ்ந்து உலவு பன்மரக் கோட்டிசெறி திவ்விய உத்தியானத்தினில்பருவம்இரு மூன்றினில் வசந்த பருவத்தினில்பார்த்தவுடன் கலந்து பயிலும்விளையாட்டின் இடை கண்பொத்து தீமையைப்பாற்ற அவர் உத்தரவினால்கரும பூமியினில் சிறந்த காஞ்சியில் வந்துகருதரிய தவம் உஞற்றும்காலத்தில் இருநாழி நெற்கொண்டு காத்திடக்கருணை வைத்துச் சிறந்ததரும(ம்) முப்பத்திரண்டும் புரி கரத்தினால்சப்பாணி கொட்டி அருளே!தாவுடை விடைக் கடவுள் மேவும் ஆவுடையம்மைசப்பாணி கொட்டி அருளே!
பகிர்