பாடல் 35 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 35 · சப்பாணிப் பருவம்

உய்வந்த நாளையில் தேவருக்கு எய்த ஒண்கடல் விடம் அயின்ற கடவுள்உடல் உயிரும் ஒன்றாக் கலந்து உள மகிழ்ச்சியாய்உரிமை உடனே பயந்ததெய்வம் தமக்கு எலாம் முதலாய எறுழ் வலிச்செங்கண் மூடிகம் இவர்ந்ததிரி நேத்திரதாரியாம் பாசாங்குசக்கரச்செல்வனையும் அமரர் நாடுகைவந்திடக் கவர்ந்து ஈரைநூறுடன்எட்டதாய்க் கணக்கிட்ட அண்டங்காவல் புரி அவுணன் உயிர் வீட்டு கந்தனைஉள் கசிவுடன் எடுத்து அணைத்துத்தைவந்த வியன் மணம் கமழ் தாமரைக் கையால்சப்பாணி கொட்டி அருளே!தாவுடை விடைக் கடவுள் மேவும் ஆவுடை அம்மைசப்பாணி கொட்டி அருளே!
பகிர்