பாடல் 12 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 12 · செங்கீரைப் பருவம்

மைக்கணிணை யிற்கருணை வழிதர திருமேனிவளர்பசும் பிரபை வீசமார்புகொடு மெல்லத் தவழ்ந்தயர்ச் சியினழுதுவண்குமுத நிகர்வாய் மலர்ந்திக்கமிழ்தின் மிக்கவா மெனமிகவு நபயிலுமின்னிளங் குதலைமொழி கேட்டென்னம்ம வென்னம்ம வின்னஞ்சொலின்னஞ்சொ லென்றுனைப் பெற்றோர்களும்பக்கமுறு செவிலியரும் வந்துநின் றுவகையம்பரவையிட மூழ்க மெய்ம்மைப்பத்தருக் கருளபய வரதமவிர் செங்கையும்பாதபங் கயமு மூன்றிச்செக்கர்நிற மணிமுடி யசைத்துவிளை யாடுமயில்செங்கீரை யாடி யருளேதிருவளரு நெல்லைநகர் வடிவுடைய காந்திமதிசெங்கீரை யாடி யருளே.
பகிர்