பாடல் 17 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 17 · செங்கீரைப் பருவம்
முருகலர் முத்துக் கொண்டை குலுங்கிட மோலிநி மிர்ந்தாடமுத்தந் தருகென வுற்றவர் முன்பிள மூரல விர்ந்தாடக்கரமலர் கொட்டுபு வருகென வேண்டுநர் காதன்மி குந்தாடக்கலைமதி யென வொளிர் வயிரக் குழையிரு காதிலி சைந்தாடவிரிகதி ருமிழ்பொற் சுட்டி நூதற்பிறை மீதுகி டந்தாடவிலையறு நவமணி வடமுத லியவுர மேவிய சைந்தாடவரைவட மொடுமணி நூபுர மாடிட ஆடுக செங்கீரைஅமைதரு புங்கவர் தழுவு சுமங்கலை ஆடுக செங்கீரை.