பாடல் 21 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 21 · தாலப் பருவம்

இணையா டுதற்கொன் றொவ்வாநீ யெடுத்தவிளையாட் டெனுந்திருக்கூத்திசையப் பசியுற் றவர்போன்மிக் கிரங்கியேங்கி மிகக் குழைவாய்க்கணையா டயிற்கண்ணீர் சோரக் கதறிக்கால்கை உதறியருட்கற்பி னனைமார் விரைந்தெடுப்பக் கண்டுமடிமீ திருந்து விம்மித்துணையா டகப்பைந் திகலைமுலைசுவைத்து முகம்பார்த் தகமகிழ்ந்துதுவர்வாய் கூட்டி மழலைகொஞ்சிச்சோதி மணிப்பூந் தொட்டிலிற்பொன்அணையா டையின்மேல் விழிவளர்பெண் ணமுதே தாலோ தாலேலோஅலர்ப்பைங் கூந்தற் காந்திமதியம்மே தாலோ தாலேலோ.
பகிர்