பாடல் 24 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 24 · தாலப் பருவம்

ககனத் துலவலா லாற்றமதங் காலாறாகக் காட்டுதலாற்கண்ணீர் ததும்ப மருவலரைக டிதுசாடுந் தன்மையினான்மிகமெய்க் கருமை யாற்றுளைக்கை வினையாற்றும்பி யெனும் பெயரால்வியங்கோ டுறலான் மதுகரம்பல் விதத்துந்தம்மின் வேழமெலாந்தகமிக் கியலுந் தொடர்முன்னிச் சார்ந்தங்கவற்றின் கவுட்சுவட்டுத்தான மடுத்துத் தரைபொதியு சம்புக்கனியிற் கிடந்தொளிர்சீரகன்மைப் பெழிலார் வேணுவனத் தணங்கேதாலோ தாலேலோவலர்ப்பைங் கூந்தற் காந்திமதி யம்மேதாலோ தாலேலோ.
பகிர்