பாடல் 19 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 19 · செங்கீரைப் பருவம்

வான்றரு மாண்பத மூன்றுபு தாம்பிர மன்றே நின்றாடும்வரத ரிடத்தமர் மரகத மெய்த்திரு மங்காய் பொங்காழிதான்றரு மின்கொடி தோய்துள பைம் புயல் தங்காய் கங்காயுந்தசைபடு வேல்கொடு நிசிசர ராவி தடிந்தா டுஞ்சேயைஈன்றனை யெமைநீ யாண்டருள் புரிவாய் என்போர் துன்போடவிகபர சுகம்வலி துதவுந லருமை யிசைந் தாய் பைந்தாருதேன்றரும் வரைவாழ் கோன்றவ மதலாய் செங்கோ செங்கீரைதிகழுமே யடியவர் புகழ்வடி வுடையவன் செங்கோ செங்கீரை.
பகிர்