பாடல் 15 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 15 · செங்கீரைப் பருவம்

மங்கை யுமைநின் னருட்காந்தி மதிப்பேர்க்கினிதா மெனக்குறித்தோவானோர் வழுத்துங் கருணைவிழிமானுந் தகைவாய்ந் தமைநினைந்தோகங்கை மிலைந்தோன் மனமும்வெருள்கவின்றோய் கடைவா ளியதெனவோகடல்சூ ழுலகின் குவலயப்பேர் கருதிவசங்காட் டுதற்பொருட்டோசெங்கை குவிப்பார் கவிச்சுவையிற் செந்தேன்நிறையுஞ் சீர்விழைந்தோசெழுமா மணிமே கலைமடிதோய் சிறுதாட்குமர னுவப்புறவோஅங்கை தனின்மைக் குவளை கொண்டாய்ஆடி யருளாய் செங்கீரைஅளிகூர் நெல்லைக் கரசிமகிழ்ந்தாடி யருளாய் செங்கீரை.
பகிர்