பாடல் 11 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 11 · செங்கீரைப் பருவம்

உம்பர்போற் றிமயப் பிறங்கலுறு மோர்தடத்தொண்கமல மலரின் மிசை கண்ணுற்றெடுத் துச்சிமோந் தன்பினீ ராட்டிநீற்றொடுநிலக் காப்பு மிட்டுப்பம்பணி நுதற்குவெண் மணிச்சுட்டி சாத்தி விற்படர்தலைப் பணி திருத்திப்பளபளெனும் வச்சிரக்குழைசெவி பொருத்திவளை,படுமிடற் றணிபலவு மிட்டம்பவளம் வளைகடக முன் கைக் கிணங்கவிட்டரைவட மணிந்து பாதத்தணிசிலம் பிட்டுமுலை யமுதூட்டி மேனையுளடங்கா மகிழ்ச்சி யோடுஞ்செம்பவள வாயின்முத் தாடுமொரு பைங்கிள்ளைசெங்கீரை யாடி யருளேதிருவருளு நெல்லைநகர் வடிவுடைய காந்திமதிசெங்கீரை யாடி யருளே.
பகிர்