பாடல் 23 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 23 · தாலப் பருவம்
கோட றவிர்சீர் செழுஞ்சோலைக் குறும்வால்வளையைக் குழவியெனக்கொண்டு புனைசிற் றாடைமன்னிக் குளிர்நீராட்டிக் கவானிருத்திப்பாடல் வரிப்பூ முளரியிதழ்ப் பசுந்தேன்எடுத்து வாய்புகட்டிப்பரிந்தொக் கலைவைத் துலவிநனி பாராட்டுபதம் மடிக்கிடத்திஊடன் மடவார் வெறுத்தெறிய வொளிர்பன்மணிகோத் தணிந்துகொஞ்சிஉறங்கா யுறங்கா யெனத்தாலாட் டுரைத்துமழலைச் சிறுமியர்மிக்காடல் புரியுந்திரு நெல்லைக்கணியேதாலோ தாலேலோஅலர்ப்பைங் கூந்தற் காந்திமதி யம்மேதாலோ தாலேலோ.