பாடல் 28 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 28 · தாலப் பருவம்

இதழ்திரை யெனுமா முரசொலிகொடுபூ வேவோர் வேள் போராலிடைதலி லடியார் குழுவெனநிகழ்கா வேடார் போதோடாரமிழ்துறழ் பலபா மழைசொரிதரநீ டாலோ னார்நீர்தோயணிமுடி திகழ்மால் வரைபடர்கொடியே யானூர் மானேர்வாய்குமிழ்மிசை மறிசேல் விழிபொருகுழைசார் கோதாய் வானாள்வார்குலம்வழி படவாழ் மயிலெனுமியலாய் கோடா மேலோர்சூழ்தமிழ்முனி தவநேர் பொருநைநனதியாய் தாலோ தாலேலோசதுமறை புகழ்வேய் வனவடி வுமையேதாலோ தாலேலோ.
பகிர்