பாடல் 31 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 31 · சப்பாணிப் பருவம்
எண்குலவு மமரர்மலர் மழைகொட்ட - நனிகொட்டமிடுதுட்ட மயடன்முதலோரிகலுளம் பறைகொட்ட வென்றிநம தென்றுசசியின்பமுகு கொம்மை கொட்டக்கண்குலவு மெய்யன் புயங்கொட்டவவுணமங் கையர்செங்கை கொங்கைகொட்டக்கனதெய்வ மறையோ ரகந்தொரு மகஞ்செய்யும்கனவிலா குதிகள் கொட்டத்திண்குலவு மாசிரியர் பூசைமடமெங்கணுஞ் சேமக் கலங்கல்கொட்டத்தேவால யங்களி லணங்கினர்பொன்மனைகளிற் றிருவிழப் பேரிகொட்டத்தண்குலவு நிண்கடைக் கண்கருணைகொட்டவொரு சப்பாணி கொட்டியருளேசாலிவா டீசர்த மிடத்தினி தமர்ந்தபடிசப்பாணி கொட்டியருளே.