பாடல் 32 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 32 · சப்பாணிப் பருவம்
பைங்கதிர் பிறங்குநின் றிருமேனி யழகைநனிபாராட்டி முதிருமன்பிற்பணியுமெய்த் தவநிலவு கவிராச பண்டிதன்பாடற் கிரங்கிமேனாட்பொங்கமிகு பரிசெனக் காசிக் கவன்செலும்போழ்தூர்ப் புறத்தவன்றன்புதல்வியிற் றோன்பு தனிதிவணிரெனின்புறந்தொட்டு வருவலென்னாவங்க வனியைந்திட வுடன்சென்றுசிறிதுநீங் காதடிசி லட்டிட்டுமோராவணத் திற்கண் டவாமிக விளக்கியவணருமையிற் புனையுமந்தத்தங்கமய மணிவளை புலம்புநின் செங்கையாற்சப்பாணி கொட்டியருளேசாலிவா டீசர்த மிடத்தினி தமர்ந்தகொடிசப்பாணி கொட்டியருளே.