பாடல் 37 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 37 · சப்பாணிப் பருவம்

செழுமதி மணமார் தருமிருதாள்பணிசீரியர் நலையாமேதிருநுத லிகுறு வெயர்வை துளித்தணி திலகம தழியாமேதொழுமொருநால்வர் தமிழ்குருகுஞ்செவி தொடுகுழை துவளாமேதொனிசெய் திலங்கெழி லாடகமுன்கைச் சூடக நெறியாமேவிழுமறை நவிலற முற்றும் வளர்த்தகைமெல்விரல் கன்றாமேமின்னிடை மெலிவுற வளரள கத்தடர்மிஞிறிகல் புரியாமேகுழுமிய மணிமுடி யிமவெற் பருண்மகள்கொட்டுக சப்பாணிகுளிர்சீ லக்கழை வனம்வாழ் சிற்பரைகொட்டுக சப்பாணி.
பகிர்