பாடல் 34 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 34 · சப்பாணிப் பருவம்
தறைதொடு புழைக்கைக் கடாங்கவிழ்ப் பப்பண்டிசரியவொண் கிண்கிணியணித்தாளிற் கிடந்தினி தலம்பவல முற்றிள்வறான்வருமுன் முந்துமொற்றைப்பிறைமருப் பிபமுகத் தொருமகற் கொழுகுதீம்பிரசப் புதுக்கனிதரும்பேரமர்க் கட்கடவுண் மந்தா கினிச்சுமைபிறங்குபொற் சடை யெந்தையைநிறைதருமு ளன்பினிற் பூசித்தருச்சனை நிகம்புரிந் தைந்தெழுத்தினிலையுணர்ந் தரிதுபுரி தவமுதிர்ந்திருநாழி நெற்கொண்டே வுலகுமுய்வான்குறைவிலெண் ணாங்கறம் வளர்த்தகைமுகிழ்த்தம்மை கொட்டியருள் சப்பாணியேகொல்லாத விரதர்மிகு நெல்வேலி வடிவம்மைகொட்டியருள் சப்பாணியே.