பாடல் 25 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 25 · தாலப் பருவம்

பாசுற் றொளிருங் கரத்தினர்செம்பவளச் சடிலா டவியலுறும்பாலப் பிறைமீ துரங்கிடந்த பன்றிமருப்பைப் பொருத்திமலையரசற் புதுமா வளர்த்து முத்தாடஞ்சொற் கனிவாய் முறுவனிலவடைத்து மதியிற் படைத்துவிளையாடு மலர்க்கை யாரமுதேபிரசப் பதுமா டகப்போகுட்டிற் பேழ்வாய்ப்பணில முமிழ்மணியைப்பிறங்குங் கருவென் றயிர்த்துமடப்பெடையோ திமமுற் றடை கிடக்குஞ்சரசிற் றிருவாழ் தமிழ்நெல்லைத் தவமேதாலோ தாலேலோதருமம் வளர்க்குங் காந்திமதி யம்மேதாலோ தாலேலோ.
பகிர்