பாடல் 63 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 63 · அம்புலிப் பருவம்

செம்மையுறு கணவர்தங் கனல்விழிச் சிசுவுணத்திரண்முலைப் பாலருத்துஞ்செவிலியர் இலாரலந் தேவியரை யேவலிற்சித்தத்து நட்புவைத்தோகொம்மைமுலை மேனையினி துதவுமை நாகனைக்கொதிவார் திரைக்கடலெனக்கூறுநின் அன்னைமிக் காதரிக் கும்பெருங்கொள்கையை மனங்குறித்தோமும்மையுல கும்புகழ முதிர்நலம் புனைபாண்டிமுதன்மைபெற வரசுபுரிவான்மோலியணி யுந்தினத் துன்மரபின் மதலையாம்முறையுணர்ந் தோவழைத்தாள்அம்மையின் சும்மையை ஒளித்தருளும் அம்மையுடன்அம்புலீ யாடவாவேஆய்ந்ததமிழ் நெல்லைவளர் காந்திமதி வல்லியுடன்அம்புலீ யாடவாவே.
பகிர்