பாடல் 1 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 1 · காப்புப் பருவம்

கார் பூத்த கடல்புடை உடுத்த புவனத்தைஅரனார் கைக் கனிக்கு ஆசையாய்க்கதிர்வேல் எடுத்து மயிலேறி வேள் சூழ்ந்து வரு(ம்)முன்னம் அக்கடவுள் செய்யஏர் பூத்த திருமேனியின் அண்ட கோடிகள்நிறைந்தது என எண்ணி விரைவின்ஈரடியினால் சூழ்ந்த ஒரு கோட்டு வாரணத்துஎந்தையை வணங்கல் செய்வாம்நார் பூத்த கற்பகத் தருவே தவஞ் செய்துதாரணியில் வந்து தோன்றித்தண் நிழல் கொடுத்து வளர் புன்னையங் கானில்சயம்பு வடிவாய் உறைந்தஆர் பூத்த செஞ்சடைப் பெருமான் ஓர் பாகத்துஅமர்ந்து உலகு எலாம் பயந்தஅன்னை கோமதி புகழ் துதிக்குந் தமிழ்க் கவிதையாவுந் தழைக்க என்றே!
பகிர்