பாடல் 4 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 4 · காப்புப் பருவம்
கங்கா சுபுத்திரன் கங்காளனுக்கு முதலானகணநாதன் வெற்றிக்கயமுகனை ஒரு கோ(டு) ஒடித்து வல்லாயுதம்எனக்கொடு கனன்று வென்றுசங்கு ஆழி கை வைத்த தாமோதரக் கடவுள்முதல் அமரர் பிழை தீர்த்தசங்கர விநாயகன் செங்கமல பாதந்தலைக் கொண்(டு) உவந்து பணிவாம்கொங்கு ஆரு நறுமலர்ப் புன்னையங் காவு(ம்)மறைமுடியு(ம்) அடியார் உள்ளமும்கோயிலாக் கொண்டு வளர் கிள்ளையைப் பிள்ளைக்கொழும் பிறையை நிகர் நுதலியைமங்காத புகழ் பெற்ற இமயமலை அரசற்குமகளாக வந்த மயிலைவரராசை அம்பதியில் உறவாய் இருந்தகோமதியைப் புரக்க என்றே.