பாடல் 3 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 3 · காப்புப் பருவம்

கடகரியின் உரி போர்வைக்கு வைத்தவர்கனல் அரி நன்மதி பார்வைக்குள் உற்றவர்கவின் உறு மன்மத காயத்தை நைத்தவர்கலைநிறை தண்மதி காலிற் குமைத்தவர்பட அர(வு) இன் அணி மார்பில் பரித்தவர்பரவையின் வெவ்விட பானத்தின் மெய்த்தவர்பகர் அரு சொல் மறை பாடித் துதித்தவர்பதமலர் பன்முறை சூடிப் பழிச்சுதும்குட வயிறன்னொடு கோழிக் கொடிக் கையர்குதலையின் மென்மொழி காதுக்(கு) உவப்பவள்குருகுல மன்னர் தூதுக்(கு) உரைத்தவர்குலவிய முன்னவர் ஆகச் செனித்தவள்வடமலை தென்மலையாகப் பணைத்திடும்வடம் அலை பொன் முலையாள் உத்தமப் பரைமரகத மன்னிய மேனிக் கயற்கணிமடல் அவிழ் புன்னையின் மானைப் புரக்கவே.
பகிர்