பாடல் 13 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 13 · செங்கீரைப் பருவம்
அரி பிரமாதியர்கள் அனைவரையும் வந்தனை செய்அம்புயத் திருவடியில் ஒன்றுஅவனிமான் முடி சூட்டி ஒன்றினை மடக்கிஅருள் ஒழுகு திருமுகம் அசைத்துப்பிரியமுற்று இமையரசன் மனைவி அனைவாஎன்றுபேசி இருகையை நீட்டப்பின்னிட்டு நீசெலப் பேதையாம் நீஎனைப்பேதையாக்கினை கொல்என்னஒருமுத்தம் இட்டுமடி மிசைவைத்து விளையாடஒளிர் முத்த மூரல் காட்டிஒண்திரைப் பரவை அமுது உண்டவா எனத்தாய்க்குஓர் ஒப்பிலா மகிழ்வு நல்கும்திரிபுவன நாயகீ சீராசை வளர்தேவிசெங்கீரை ஆடி அருளே!தேன் மொய்த்த புன்னையங் கானில் பசுங்கிள்ளைசெங்கீரை ஆடி அருளே!