பாடல் 65 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 65 · அம்புலிப் பருவம்
செங்கதிர்முன் நின்னொளி மழுங்கும் இவள் அவனுடல்திகழொளி மழுங்கல் செய்வாள்சேர்ந்துபல கோளுனைச் சூழுமொரு கோளுமிவள்சீரடியர் முன்னும் அணுகாவங்கமுறழ் வெள்ளிய வனப்பன்நீ இவளெண்ணின்மாற்றுயர் பசும்பொன் அனையாள்மாதத்தில் ஒருநாள் சுகம்பெறுவை இவளென்றும்வளர்சுகானந்த வடிவாள்சங்கரன் உனைத்தாளி னாலரைத் தான் இவள்சரண்பணிந் தேவல் புரிவான்தனிமண் டலத்தன்நீ இவளுல கனைத்தையுந்தந்தசிறு பண்டி யுடையாள்அங்கர நிமிர்த்துனை அழைப்பதரி தல்லவோஅம்புலீ யாடவாவேஆய்ந்ததமிழ் நெல்லைவளர் காந்திமதி வல்லியுடன்அம்புலீ யாடவாவே.