பாடல் 79 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 79 · அம்மானைப் பருவம்
சொற்பொரு ளாய்மணியிற்சுட ராயுயிர் தோறுறும் அம்மேமெய்துப்புர வாதிய நற்குண மேவிய தூயவர் பண்நீடுகற்பக நேரரு மைப்புக ழாகரி காதகர் நண்ணாதகட்கடை தோயும ழைக்கருணாநிதி காதலி யெந்நாளும்விற்பன மீறி வழுத்துகு லேசுர மீனவ னொன்னாரைமிக்குறு தானைகொள் துர்க்கையில் அடும் வீறொடு விண்ணாரும்அற்புத வேணுவ னத்தினர் சேர்குயி ஆடுக வம்மானைஅற்றமெ லாமறி வுற்றருள் கூர்மயில் ஆடுக வம்மானை.