பாடல் 7 · முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் · குமரகுருபரர்
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 7 · காப்புப் பருவம்
மானிறக் கடவுடிரு மறுமார்பி னறவிரி வனத்துழாய்க் காடுமூடிமாயிருள் வழங்குதன் றிருமாளி கைக்கந்தண் மணிவிளக் கிட்டுமுட்டாட்கானிறைக் குங்கமல வீட்டுக்கு நெட்டிதழ்க் கதவந் திறந்தளித்தும்காதன்மை காட்டுங் கவுத்துவத் துடன்வந்த கன்னிகையை யஞ்சலிப்பாம்மீனிறப் புணரியை விழுங்குங் கடற்றானை வெள்ளமொடு கள்ளமனமும்மெய்யுமிரு ளத்திரளு மவுணக் கருங்கங்குல் விடியக் கடுங்குரல்விடும்தீநிறக் குடுமிவெண் சேவலை யுயர்த்துவண் சிறைமயிற் பரிநடாத்தும்சேவகப் பெருமாளை வேதபுரி வருமிளஞ் சேயைப் புரக்கவென்றே.